3-வது உலகப் போர் மூண்டால் அணு ஆயுதங்கள் பங்கு பெறும்: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு

மாஸ்கோ: உக்ரைன் நாட்டின் மீது கடந்த 7 நாட்களாக ரஷ்ய ராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதனிடையே நேற்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதாவது: உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கையை ரஷ்யா கடந்தவாரம் தொடங்கியது. இதனிடையே உக்ரைன் நாடானது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால்அது பேரழிவை ஏற்படுத்தும். அது மிகவும் பயங்கரமானதாக இருக்கும். இது 3-வது உலகப் போராகஅமைந்தால் அது அணு ஆயுதங்களை உள்ளடக்கியதாகவும்,பேரழிவை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். 5 லட்சத்துக்கும் அதிகமான உக்ரைன் ராணுவத்தினர் போரில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் உக்ரைன் அதிபர்ஜெலென்கி நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறும்போது, “முதல் 6 நாள் நடந்த போரில் இதுவரை 6 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குண்டு வீச்சாலும், வான் தாக்குதலாலும் எங்களது நாட்டை ரஷ்யா கைப்பற்றி விட முடியாது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.