Russia Ukraine Crisis Live: உக்ரைனுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை: சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இன்று தொடங்கியது!

Ukraine News: இந்திய மாணவர்களை, உக்ரைன் ராணுவம் பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளது. மனித கேடயங்களாக பயன்படுத்தி, ரஷ்ய எல்லைக்கு செல்ல விடாமல் தடுப்பதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றம்சாட்டியுள்ளார்.

மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் உறுதி!

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய மாணவர்களின் பாதுகாப்பில் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்தார்.

சி17 ரக போர் விமானம் மூலம் 220 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்!

ருமேனியாவில் இருந்து முதல் போர் விமானத்தில் ஏற்கனவே 200 இந்தியர்கள் தாயகம் திரும்பிய நிலையில், தற்போது ஹங்கேரியில் இருந்து சி17 ரக போர் விமானம் மூலம் 220 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்.

ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம்!

உக்ரைனில் உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி, ரஷ்ய படைகள் உடனே வெளியேற வேண்டுமென ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு 141 நாடுகள் ஆதரவு அளித்தன. ஆனால் இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்களிக்கவில்லை.

Ukraine News Live Updates

உக்ரைன் மீதான தாக்குதல்.. 500 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு!

ரஷ்யாவின் தொடர் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்ததில், 500 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக ரஷ்யா முதல்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.

இந்தியர்கள் கார்கிவ் நகரில் இருந்து எப்படியாவது வெளியேறுங்கள்!

இந்தியர்கள் கார்கிவ் நகரில் இருந்து எப்படியாவது வெளியேறுங்கள். வாகனங்கள் கிடைக்காவிடில் நடந்தாவது வெளியேறி உயிரை காத்துக்கொள்ளுங்கள். கார்கிவில் இருந்து இந்தியர்கள், அனைவரும் பெசோசின், பப்பே, பெஸ்ஸியுடோவ்கா ஆகிய ஊர்களுக்கு உடனே செல்ல இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

கார்கிவ் ரயில் நிலையத்தில் 1000 இந்திய மாணவர்கள் காத்திருப்பு!

கார்கிவ் நகரை விட்டு உடனே வெளியேற இந்திய அரசு கூறிய நிலையில், ரயில்களில் இந்தியர்களை ஏற விடாமல், உக்ரைனியர்கள் தடுப்பதாக மாணவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். கார்கிவ் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு மாணவர்கள் 300 பேர் உட்பட 1000 இந்திய மாணவர்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates

17:12 (IST) 3 Mar 2022
உக்ரைனுக்காக ஏற்கனவே 1.5 பில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டுள்ளது – ஐ.நா உதவித் தலைவர்

ஐ.நாவின் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ், உக்ரைனில் மனிதாபிமானிகள் தடையின்றி வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்தார். அவர் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் எங்களிடம் வளங்கள் உள்ளன. அவசர உதவிக்காக திரட்டப்பட்ட 1.5 பில்லியன் டாலர் உள்ளது என்று அவர் கூறினார்.


17:09 (IST) 3 Mar 2022
ரஷ்ய தாக்குதலுக்கு தயாராகும் உக்ரைன் தன்னார்வலர்கள்

உக்ரைன் கரமான டினிப்ரோவில் உள்ள தன்னார்வலர்கள் ரஷ்ய துருப்புக்கள் மீது படையெடுப்பதில் இருந்து தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர்.


17:03 (IST) 3 Mar 2022
ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கொலை வழக்கு: 4 பேருக்கு இரட்டை ஆயுள்!

திருவண்ணாமலை அருகே போளூரில் 2007ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்படி, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூ.16500 அபராதமும், மேலும் ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.16000 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


16:43 (IST) 3 Mar 2022
9,000 ரஷிய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு – உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம்!

உக்ரைன் மீது ரஷிய படைகள் 8 ஆவது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்தநிலையில், உக்ரைன் – ரஷியா இடையேயான மோதலில் இதுவரை 9,000 ரஷிய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் உக்ரைன் நடத்திய பதில் தாக்குதலில் இதுவரை ரஷியாவின் 30 போர் விமானங்கள், 31 ஹெலிகாப்டர்கள், 217 பீரங்கி வாகனங்கள், 374 ராணுவ வாகனங்கள், 42 ராக்கெட் ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


16:38 (IST) 3 Mar 2022
ஒருங்கிணைந்த கல்வி திட்டம்: மத்திய அரசின் நிதி ரூ.3,186 கோடியாக குறைப்பு!

தமிழகத்தில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தை செயல்படுத்துவதற்கான மத்திய அரசின் நிதி ரூ.3,186 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. 2020-2021ஆம் ஆண்டில் ரூ.3,275 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு தற்போது ரூ.3,186 கோடியாக குறைத்து வழங்கப்பட்டுள்ளது.


16:24 (IST) 3 Mar 2022
ஆப்ரேசன் கங்கா: 2 விமானங்கள் டெல்லி வருகை – மத்திய அமைச்சர் தகவல்!

உக்ரைன் நாட்டின் ஸ்லோவாகியாவில் இருந்து 370 மாணவர்களுடன் ‘ஆப்ரேசன் கங்கா’ திட்டத்தின் கீழ் 2 விமானங்கள் டெல்லி வர உள்ளன என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.


16:22 (IST) 3 Mar 2022
ராக்கெட் எஞ்சின்கள் வழங்குவது நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்ய விமானங்கள் அமெரிக்க வான்வெளியில் பறக்க தடை விதித்தது. இந்நிலையில், அமெரிக்காவிற்கு ராக்கெட் எஞ்சின்கள் வழங்குவதை நிறுத்துவதாக ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


16:20 (IST) 3 Mar 2022
சென்செக்ஸ் – நிஃப்டி குறியீடுகள் சரிவு!

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 366.22 புள்ளிகள் சரிந்து 55,102.68 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 107.90 புள்ளிகள் சரிந்து 16,498.05 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவானது.


16:00 (IST) 3 Mar 2022
உக்ரைனுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை: சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) இன்று தொடங்கியது!

உக்ரைன் போர்க்குற்ற விசாரணையை ஐசிசி வழக்கறிஞர் இன்று தொடங்கினார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞர், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் போது அதிகரித்து வரும் பொதுமக்களின் இறப்பு எண்ணிக்கை மற்றும் சொத்துக்களின் பரவலான அழிவுக்கு மத்தியில் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது இனப்படுகொலைக்கு பொறுப்பான மூத்த அதிகாரிகளை குறிவைக்கக்கூடிய ஒரு விசாரணையைத் தொடங்கினார்.

ஐசிசி வழக்கறிஞர் கரீம் கான், இந்த போரில் அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கிய விசாரணையைத் தொடங்குவதற்கான தனது முடிவை நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்குத் தெரிவித்ததார். அப்போது பேசிய அவர், “ஆதாரங்களை சேகரிப்பதில் எங்கள் பணி இப்போது தொடங்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.


15:51 (IST) 3 Mar 2022
உக்ரைன் சூழல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இந்திய தூதர்களுடன் ஒருங்கிணைந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மீட்பு பணியில் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வர் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


15:32 (IST) 3 Mar 2022
ரஷ்ய எல்லை வழியாக மீட்பு பணி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

உக்ரைனின் மேற்கு பகுதியில் அதிகமான மாணவர்கள் தங்கியிருப்பதால், அவர்களை ரஷ்ய எல்லை வழியாக அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தமிழ்நாட்டு மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, அவர்களை வழிநடத்தி அழைத்து வர வேண்டும் என்றும், உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்கள் மீட்பது தொடர்பான ஆலோசனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


15:11 (IST) 3 Mar 2022
உக்ரைனின் செர்னிஹிவ் பகுதியில் ரஷ்யா தாக்குதல்!

உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், செர்னிஹிவ் பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கை ரஷ்ய ராணுவம் சிதைத்துள்ளது. இதில் எண்ணெய் கிடங்கு தீப்பிடித்து எரியும் பரபரப்பான காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


15:08 (IST) 3 Mar 2022
சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதி செய்க – மதுரைக்கிளை உத்தரவு!

புதுக்கோட்டை அன்னவாசல் பகுதியை சேர்ந்த அதிமுக கவுன்சிலர்கள் தாக்கல் செய்த மனுவில், பிற கட்சிகளை சேர்ந்த நபர்களை தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யும்படி மிரட்டல் வருவதாக குற்றச்சாட்டி இருந்தனர்.

இந்நிலையில், அன்னவாசல் பேரூராட்சியின் 9 அதிமுக கவுன்சிலர்களும் தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


14:24 (IST) 3 Mar 2022
கார்கிவ்வில் 34 பொதுமக்கள் பலி, மரியுபோல் நகரில் தண்ணீர், மின்சாரம் இல்லை – உக்ரைன் தகவல்

மார்ச் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில், கார்கிவ் நகரில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 34 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அவசரகால சேவை தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநர் கூறுகையில், ரஷ்ய படையெடுப்பின் முதல் இலக்குகளில் ஒன்றான மரியுபோல் துறைமுக நகரத்தில், மின்சாரம் அல்லது நீர் விநியோகம் இல்லை என்றார்.


14:04 (IST) 3 Mar 2022
பெய்ஜிங் பாராலிம்பிக் போட்டியில் ரஷ்ய, பெலாரஸ் வீரர்கள் பங்கேற்க தடை

பாராலிம்பிக் போட்டியின் தலைவர் ஆன்ட்ரூ பார்சன்ஸ் உக்ரைனிடம் போர் தொடுத்துள்ள ரஷ்ய வீரர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரசும் போரில் ஈடுபட்டுள்ளதால் அந்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கும் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


13:48 (IST) 3 Mar 2022
உக்ரைன் கட்டுப்பாட்டில் கார்கிவ், செர்னிஹிவ், மரியுபோல் – பிரிட்டிஷ் ராணுவம்

உக்ரைனில் ரஷ்யாவின் படையெடுப்பு கடந்த மூன்று நாள்களாக முன்னேற்றம் அடைந்திருந்தாலும், கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் மரியுபோல் ஆகிய நகரங்கள் இன்னும் உக்ரைன் கட்டுப்பாடில் தான் இருப்பதாக பிரிட்டிஷ் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.


13:46 (IST) 3 Mar 2022
உக்ரைனில் இருந்து சுமார் 5.75 லட்சம் பேர் போலந்தில் தஞ்சம்

பிப்ரவரி 24 அன்று ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து சுமார் 5,75,100 பேர் உக்ரைனில் இருந்து போலந்திற்குள் தஞ்சம் அடைந்துள்ளதாக போலந்து எல்லைக் காவலர் தெரிவித்தார். புதன்கிழமை சுமார் 95,000 பேர் நுழைந்ததாகவும், வியாழக்கிழமை 0600 GMT நிலவரப்படி சுமார் 27,100 பேர் எல்லையைத் தாண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.


13:23 (IST) 3 Mar 2022
3,700க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இன்று இந்தியா வருகை

மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, புக்கரெஸ்ட், சுசேவா, கோசிஸ், புடாபெஸ்ட் மற்றும் ர்செஸ்ஸோவில் இருந்து வரவிருக்கும் 19 விமானங்களில் 3,726 இந்தியர்கள் இன்று இந்தியாவுக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.


12:44 (IST) 3 Mar 2022
ஓபிஎஸ்-உதயகுமார் சந்திப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்து பேசினார். அதிமுகவில் சசிகலாவை இணைக்க கோரி தேனி அதிமுக நிர்வாகிகள் நேற்று தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.


12:37 (IST) 3 Mar 2022
மீட்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.


12:20 (IST) 3 Mar 2022
திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிப்பு

மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், நகராட்சி துணை தலைவர் பதவிகளில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் மாநகராட்சி மேயர், சேலம், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் பதவிகளுக்கு காங்கிரஸ் போட்டி என திமுக அறிவித்துள்ளது.


12:08 (IST) 3 Mar 2022
உக்ரைனில் இருந்து வரும் மாணவர்களுக்கு உதவி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பும் மருத்துவ மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க உதவி செய்யப்படும். வெளிநாடுகள் சென்று மருத்துவம் படிக்கும் மாணவர்களின் பட்டியல் தயார் செய்யப்படுகிறது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


11:47 (IST) 3 Mar 2022
அமெரிக்க அதிபருடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸி. பிரதமர் ஸ்காட் மாரிசன் உள்ளிட்ட குவாட் தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று பங்கேற்கிறார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் மதிப்பீடுகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


11:30 (IST) 3 Mar 2022
அதிமுகவின் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின்

திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்கள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.


11:08 (IST) 3 Mar 2022
மேக் இன் இந்தியா திட்டம் நமது திறமையை உலகுக்கு காட்டுகிறது: பிரதமர் மோடி

இந்தியாவின் மொத்த ஜிடிபியில், உற்பத்தி துறை 15% பங்கு வகிக்கிறது. மேக் இன் இந்தியா திட்டம் உலகுக்கு நமது திறனை காட்டுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.


10:39 (IST) 3 Mar 2022
சசிகலா அதிமுகவின் தலைமையேற்க வேண்டும்.. முன்னாள் எம்.எல்.ஏ!

அதிமுகவின் தலைமை சரியில்லாததால்தான் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு தோல்வி ஏற்பட்டது. சசிகலா அதிமுகவின் தலைமையேற்க வேண்டும், டிடிவி தினகரன் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என கோவை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி பேட்டியில் கூறினார்.


10:38 (IST) 3 Mar 2022
டாஸ்மாக் கடை.. மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு புது உத்தரவு!

டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்கும் வகையில் விதிகளில்’ தமிழ்நாடு அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி மக்கள் தெரிவிக்கக் கூடிய ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்காமல், எந்த டாஸ்மாக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு


10:34 (IST) 3 Mar 2022
உக்ரைன் மக்களுடன் அமேசான் நிற்கிறது.. அமேசான் சி.இ.ஒ!

உக்ரைன் நிலைமை மோசமாகி வருகிறது. உக்ரைன் மக்களுடன் அமேசான் நிற்கிறது. மேலும் உக்ரைன் மக்களுக்கு உதவி செய்ய, நன்கொடைகள், இணைய பாதுகாப்பு உதவிகளை வழங்க உள்ளதாக அமேசான் சிஇஓ அன்டி ஜாஸி கூறியுள்ளார்.


10:34 (IST) 3 Mar 2022
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை.. மதமாற்றம் காரணம் இல்லை!

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலைக்கு, மதமாற்றம் காரணம் இல்லை என தேசிய குழந்தைகள் நல ஆணையம் விசாரணை அறிக்கையில் தகவல்!


10:33 (IST) 3 Mar 2022
இந்தியாவில் குறைந்த கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 6,561 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 142 பேர் உயிரிழந்தனர். 77 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


10:33 (IST) 3 Mar 2022
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய பாடம் அறிமுகம்!

10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிதாக தொழிற்கல்வி என்ற பொதுத்தேர்வு அறிமுகம். மே 21ல் தொழிற்கல்வி பாடத் தேர்வு நடைபெறுகிறது. தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் இல்லை என கல்வித்துறை தெரிவித்துள்ளது.


10:33 (IST) 3 Mar 2022
சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு வீரர் தற்கொலை!

சென்னை விமான நிலைய கழிவறையில் சிஐஎஸ்எப் வீரா் யஸ்பால்(26) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தானை சேர்ந்த யஸ்பால், 2017ஆம் ஆண்டு முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தவர். இதுகுறித்த் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


09:43 (IST) 3 Mar 2022
உக்ரைன் அதிகாரிகளுக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் பாராட்டு!

கார்கிவ் நகரில் இருந்து மாணவர்கள் பாதுகாப்பாக செல்வதற்கு ரயில்களை ஏற்பாடு செய்வதில் உக்ரைன் பாதுகாப்பு துறையின் பங்களிப்பு அதிகம். இந்திய மாணவர்களை விரைவாக வெளியேற்றுவதை சாத்தியமாக்கிய உக்ரைன் அதிகாரிகளுக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது.


09:42 (IST) 3 Mar 2022
பெட்ரோல் விற்பனை நிலையம்.. தமிழக அரசு உத்தரவு!

பெட்ரோல் விற்பனை நிலையம், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. கிராமப்புற பகுதிகளில் 300 மீட்டர் இடைவெளியிலும், மாவட்ட முக்கிய, இதர சாலைகளில் 200 மீட்டர் இடைவெளியிலும் பெட்ரோல் நிலையம் அமைக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


09:42 (IST) 3 Mar 2022
ரஷ்யா குற்றச்சாட்டு.. இந்தியா விளக்கம்!

உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை பிணைக்கைதிகளாக வைத்திருப்பதாக’ ரஷ்யா குற்றம்சாட்டிய நிலையில், அதுபோல் எந்த தகவலும் வரவில்லை. இந்திய மாணவர்களை வெளியேற்றுவதில் உக்ரைன் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக இந்தியா விளக்கமளித்துள்ளது.


09:42 (IST) 3 Mar 2022
திருப்பூர் துணை மேயர் பதவி சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கியது திமுக!

திருப்பூர் துணை மேயர் பதவி, கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவி, மற்றும் 4 நகராட்சி துணைத்தலைவர் பதவிகளை ஒதுக்கீடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது.


08:40 (IST) 3 Mar 2022
அதிமுக-வில் மீண்டும் சசிகலா, டிடிவி?

தேனி பெரியகுளத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டுமென கட்சி நிர்வாகிகள் ஒருமனதாக முடிவு செய்த நிலையில், தீர்மானத்தின் மீது நல்ல முடிவெடுக்கப்படும் என ஓபிஎஸ் கூறியதாக மாவட்ட செயலாளர் சையத்கான் கூறினார்.


08:40 (IST) 3 Mar 2022
உ.பி. தேர்தல்.. 57 தொகுதிகளில் 6ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

உத்தரபிரதேச மாநிலம் 10 மாவட்டத்தில் உள்ள 57 தொகுதிகளில் 6ம் கட்ட சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.


08:40 (IST) 3 Mar 2022
நவீனின் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது.. மு.க.ஸ்டாலின்!

உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற கர்நாடக மாநில மாணவர் நவீனின் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. இத்தருணத்தில் மத்திய அமைச்சர்களின் கருத்துகளும், பேட்டிகளும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்கள் மீது குறைக்கூறுவதை நிறுத்திவிட்டு, அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடவேண்டும். மத்திய அமைச்சர்கள் தேவையற்ற கருத்துகள் தெரிவிப்பதை பிரதமர் தடுக்க வேண்டும்.


08:39 (IST) 3 Mar 2022
உக்ரைன்.. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேறினர்!

உக்ரைன் நாட்டில் இருந்து அண்டை நாடுகளுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமானோர், அகதிகளாக வெளியேறியதாக ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையர் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார்.


08:38 (IST) 3 Mar 2022
உக்ரைனியர்கள் 2000 பேர் பலி!

ரஷ்ய ராணுவம் 6 நாட்களாக நடத்தி வரும் தாக்குதலில், உக்ரைனியர்கள் 2000 பேர் பலியாகிவிட்டதாக அந்நாட்டு அரசு தகவல்!


08:38 (IST) 3 Mar 2022
துறைமுக நகர் கெர்சானை கைப்பற்றிய ரஷ்யா

உக்ரைனிடம் இருந்து துறைமுக நகரான கெர்சானை ரஷ்யா கைப்பற்றிய நிலையில், நான்கு புறங்களிலும் இருந்து உக்ரைனுக்குள் தொடர்ந்து முன்னேறுவதாக ரஷ்யப் படைகள் அறிவித்துள்ளது.


08:38 (IST) 3 Mar 2022
உக்ரைன் தாக்குதல்.. களத்தில் இறங்கிய முன்னாள் குத்துச்சண்டை வீரர்!

உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிராக, கீவ் நகர மேயரும், முன்னாள் குத்துச்சண்டை வீரருமான விடாலி கிளிட்கோ தனது சகோதரருடன் களம் இறங்கியுள்ளார்.


08:37 (IST) 3 Mar 2022
உக்ரைனில் சுமார் 1.2 கோடி பேர் பாதிப்பு!

ரஷ்ய படைகளின் கடும் தாக்குதலால், உக்ரைனில் சுமார் 1.2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அண்டை நாடுகளில் தஞ்சமடைந்த 40 லட்சம் பேருக்கு, அவசர மனிதாபிமான உதவிகளுக்காக ரூ.12,750 கோடி தேவைப்படுவதாக ஐ.நா. கூறியுள்ளது.


08:37 (IST) 3 Mar 2022
பெலாரஸ் ராணுவ அதிகாரிகள் 22 பேருக்கு தடை!

உக்ரைன் தாக்குதல் தொடர்பாக பெலாரஸ் ராணுவ அதிகாரிகள் 22 பேருக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.


08:36 (IST) 3 Mar 2022
ரஷ்ய பூனைகளுக்கு தடை!

உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதால், ரஷ்யாவில் இருந்து பூனைக்குட்டிகளை இறக்குமதி செய்யவும், கண்காட்சிகளில் அனுமதிக்க கூடாது என்றும் பூனைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு தடை விதித்துள்ளது.


08:35 (IST) 3 Mar 2022
ரஷ்ய பூனைகளுக்கு தடை!

உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதால், ரஷ்யாவில் இருந்து பூனைக்குட்டிகளை இறக்குமதி செய்யவும், கண்காட்சிகளில் அனுமதிக்க கூடாது என்றும் பூனைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு தடை விதித்துள்ளது.


08:35 (IST) 3 Mar 2022
உக்ரைனில் கர்நாடக மாணவர் உயிரிழப்பு… ஸ்டாலின் ஆதங்கம்!

நீட் தேர்வை ரத்து செய்வது உடனடி இலக்காக அமைய வேண்டும்; மருத்துவம் படிக்கச் சென்று உயிரிழந்த மாணவனின் அவல நிலை நீட் விலக்கு மசோதாவின் நோக்கத்தை மீண்டும் உணர்த்துகிறது. உக்ரைன் சூழல் நீட் தேர்வு ரத்துக்கு மேலும் வலுவான காரணத்தை உருவாக்கியுள்ளது. நீட் தேர்வால் ஏழை, எளியவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக் கனியாகும் ஆபத்தை போக்கவே திமுக குரல் கொடுத்து வருகிறது. கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியும் இதே கருத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார்- மு.க.ஸ்டாலின்


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.