இந்தியர்களை மீட்கச் சென்ற மேலும் 3 விமானப்படை விமானங்கள் நாடு திரும்பின.! <!– இந்தியர்களை மீட்கச் சென்ற மேலும் 3 விமானப்படை விமானங்கள் … –>

ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காகச் சென்ற மேலும் 3 விமானப்படை விமானங்கள் நாடு திரும்பின.

இது தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மேலும் 3 சி-17 ரக விமானங்கள் உக்ரைனில் சிக்கிய 630 இந்தியர்களுடன் ஹிண்டன் விமானப்படை தளத்திற்கு வந்தடைந்ததாக தெரிவித்துள்ளது.

உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா மற்றும் ஹங்கேரி வழியாக விமானப்படை விமானங்கள் இந்தியர்களை மீட்டு வந்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.