கடைசி வரை நினைச்சது நடக்காம போச்சே: கடும் சோகத்தில் எச் வினோத்..!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக
எச் வினோத்
இயக்கத்தில் ‘
வலிமை
‘ படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகியுள்ள ‘வலிமை’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது.

‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.
போனி கபூர்
தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித் ரசிகர்களின் வெறித்தனமான காத்திருப்பிற்கு பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் ‘வலிமை’ படம் வெளியாகி உள்ளது.

வலிமை பற்றிய விமர்சனங்கள் பல கலவையான வந்த போதிலும், வசூலில் எந்த குறையும் இல்லை என்றே கூறப்படுகிறது. பலவகையான எதிர்மறை விமர்சனங்களுக்கு மத்தியிலும் 150 கோடியை எட்டி இருக்கிறது வலிமை. இதனை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரும் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

42 வயசாகிருச்சு.. இன்னும் ஏன் கல்யாணம் ஆகலை..?: மனம் திறந்த பிரபாஸ்..!

இது ஒருபுறம் இருக்க இயக்குனர் வினோத் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக வருத்தத்தில் இருந்து வருகிறாராம். அதாவது படம் வெளியாவதற்கு முன்பாகவே இந்த கால இளைஞர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை குறித்து படத்தில் பேசியிருந்தோம் என பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார் வினோத். ஆனால் அந்த மெசேஜ் சரியான முறையில் இளைஞர்களை போய் சேரவில்லை என்ற வருத்தத்தில் உள்ளாராம்.

‘வலிமை’ கூட்டணி மூன்றாவது முறையாக ‘ஏகே 61’ படத்தில் இணைய உள்ளது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அடுத்த மாதம் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப்படத்தில் அஜித் ஜோடியாக தபுவும், மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

“வலிமை” யான வசூல் வேட்டை; படக்குழுவினர் ஹேப்பி !

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.