கல்யாணம் என்றால் அது விஜய் மட்டும்தான்…! அவர் மீது வெறித்தனமாக இருக்கிறேன்…! ஓப்பனாக சொன்ன ராஷ்மிகா

தளபதி
விஜய்
மேல் எனக்கு ஏகப்பட்ட க்ரஷ் இருக்கிறது அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக
ராஷ்மிகா
மந்தனா கூறியுள்ளார்.கடந்த ஒரு சில வருட காலத்தில் கிடுகிடுவென முன்னணி நடிகையாக வளர்ந்துவிட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா.தெலுங்கு மற்றும் தமிழில் பிஸியாக வலம் வரும் இவர், தமிழிலும் தனது தடத்தை பதித்துவிட்டார்.

அழகு பதுமையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர். மிக குறுகிய நாட்களிலேயே முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்துவிட்டார். விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து இவர் நடித்த
தெலுங்கு
திரைப்படமான கீதா கோவிந்தம் திரைப்படம் தெலுங்கு
ரசிகர்கள்
மட்டும் இன்றி தமிழ் ரசிகர்களையும் அதிகமாகவே கவர்ந்து விட்டது. அந்த படத்தில் ராஷ்மிகாவின் சிணுங்கல், பேஸ் ரியாக்ஷனை பார்த்து பலரும் அவருக்கு ரகிர்கள் ஆகிப்போனார்கள்

Dhanush:ஐஸ்வர்யா பற்றி நல்ல வார்த்தை சொன்ன தனுஷ்

நேஷ்னல் க்ரஷ்
நாயகியான ராஷ்மிகா மந்தனா, கன்னடம் மட்டுமின்றி, தமிழ் மற்றும் தெலுங்கில் கலக்கு கலக்கு வருகிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். தற்போது பாலிவுட்டில் தனது அறிமுகத்தை கொடுத்து அங்கேயும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

நடிகை ராஷ்மிகா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தளபதி விஜய் மீது எப்போதும் எனக்கு ஒர் ஈர்ப்பு உண்டு, சிறுவயதிலிருந்தே நான் தளபதியின் ரசிகை அவரை நான் நேசிக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் கூறியுள்ளார்.கடந்த ஆண்டு வெளியான
பீஷ்மா
திரைப்படத்தின் ப்ரோமேஷனின் போது, ராஷ்மிகாவிடம் தனக்கு நண்பர், காதலன் மற்றும் கணவனாக விரும்பும் மூன்று நடிகர்களின் பெயரைக் கூறுமாறு நிருபர் கேட்டார்.

அப்போது, பீஷ்மா படத்தில நடித்த
நிதின்
தனது நண்பராக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும், தளபதி விஜய் என் பியூவாக இருக்க வேண்டும். நான் அவர் மீது வெறித்தனமாக இருக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றாள். யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டபோது, விஜய்யை மட்டுமே திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.