பிரதான கட்சிகளை வாஷ் அவுட் செய்தும், இறுதியில் ட்விஸ்ட்… குலுக்கலில் இரணியலைக் கைப்பற்றிய பாஜக!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இரணியல் பேரூராட்சியில் தி.மு.க, அ.தி.மு.க, கங்கிரஸ் என பிரதான கட்சிகளை வாஷ் அவுட் செய்து அமோக வெற்றி பெற்று கெத்து காட்டியிருந்தது பா.ஜ.க. மொத்தமுள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளில் பா.ஜ.க வென்றது. 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றார்கள். அதிலும் 4-வது வார்டில் தி.மு.க முன்னாள் கவுன்சிலர் முருகன் சுயேச்சையாகப் போட்டியிட்டு ஒரு ஓட்டு வாங்கியதை ‘ஒத்த ஓட்டு தி.மு.க’ என ட்ரெண்ட் செய்து தமிழக அளவில் கவனம் பெற்றிருந்தது இரணியல் பேரூராட்சி. எனவே தலைவர் தேர்தலில் பா.ஜ.க அறிவிக்கும் வேட்பாளர் போட்டியில்லமல் வெற்றி பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு.

வெற்றிபெற்ற பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீகலா

பா.ஜ.க சார்பில் பஞ்சாயத்து பேரூராட்சி வேட்பாளராக 12-வது வார்டு உறுப்பினர் ஸ்ரீகலா அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் தக்கலை தெற்கு ஒன்றிய பா.ஜ.க செயலாளர் வினோத் காமராஜின் மனைவியும், 10-வது வார்டு உறுப்பினருமான கீதா தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். வார்டு உறுப்பினர்கள் 15 பேரும் வாக்களித்தனர். அதில் ஒரு ஓட்டு செல்லாத ஓட்டாக இருந்தது. மீதமுள்ள 14 ஓட்டுகளும் ஸ்ரீகலாவுக்கு -7, கீதாவுக்கு -7 என சரிசமமாக கிடைத்தது. இதையடுத்து குலுக்கல் முறையில் பா.ஜ.க அறிவித்த வேட்பாளரான ஸ்ரீகலா வெற்றிபெற்றார்.

இரணியலில் நீக்கப்பட்ட பா.ஜ.க நிர்வாகி

இதையடுத்து பா.ஜ.க அதிகாரப்பூர்வமாக அறிவித்த வேட்பாளரை தோற்கடிக்கும் கெட்ட எண்ணத்துடன் போட்டியிட்டதாக வார்டு உறுப்பினர் கீதா மற்றும், கீதாவின் கணவர் வினோத் காமராஜ் ஆகியோரை பா.ஜ.க-வில் இருந்து நீக்கியதாக மாவட்ட தலைவர் தர்மராஜ் அறிவித்துள்ளார். தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் விதமாக இரணியல் பேரூராட்சியை கோட்டையாக மாற்றியது பா.ஜ.க. ஆனால் தலைவர் தேர்தலில் பா.ஜ.க கோட்டையில் ஓட்டை விழுந்தது குமரியில் பேசுபொருளாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.