லெஜெண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் லீக்

இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் புதிய படம் ஒன்றில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார் . இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா, சரவணனனுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, பிரபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை வெளியாக இருந்த நிலையில் , அதற்கு முன்பே தற்போது இணையத்தில் லீக்காகி உள்ளது . தி லெஜண்ட் என்று தலைப்பு வைக்கப்பட்ட போஸ்டர் இணையத்தில் பரவி வருவதை கண்டு படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.