இம்யூனிட்டி… தினசரி உணவில் கிராம்பு, கருப்பு மிளகு இப்படி சேர்த்து சாப்பிடுங்க!

Tamil Health Update : நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியான விகிதத்தில் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் உடலில் எதிர்ப்பு சக்தி குறைய குறைய தொற்று நோய் தாக்கம் அதிகரித்து மரணத்தை தழுவும் நிலை ஏற்படும். இந்த எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்.

உணவு மட்டுமல்லாது சமையலுக்கு பயன்படுத்தும் சில மசாலா பொருட்களை கொண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இந்த பொருட்களை நமது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது கட்டாயம். தற்போது உலகம் முழுவதும் பெரும்அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரானுக்கு எதிராக இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தும் மசாலா பொருட்கள் சிறந்த பலன்களை கொடுத்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த இயற்கை மசாலா பொருட்களுடன ஆரோக்கியமான உணவு மற்றும் போதுமான உடற்பயிற்சியை எடுக்கும்போது உடல் நோய் எதிர்பபு சக்தி வெகுவாக அதிகரிக்கும்.

கிராம்பு மற்றும் கருப்பு மிளகு

கிராம்பு, கருப்பு மிளகு, இலவங்கப்பட்டை, சீரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட முக்கிய பொருட்கள் மற்றும் ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் காணப்படுகின்றன. உங்கள்

கருப்பு மிளகு நன்மைகள்

கருப்பு மிளகு தூள் வடிவத்திலும் முழு வடிவத்திலும் கிடைக்கும். இது இந்திய குடும்பங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் ஒன்று, லேசான காரமான சுவையைக் கொண்டுள்ள இந்த கருப்பு மிளகு கீல்வாதம், தோல் நோய்கள் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவு மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது. பல்துறை மசாலா ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை அதிகரிக்கவும் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது.

உங்கள் தினசரி உணவில் கருப்பு மிளகு சேர்ப்பது எப்படி

உங்கள் தினசரி உணவில் கருப்பு மிளகு சேர்ப்பது எளிதானது மற்றும் அதிக தொந்தரவு இல்லாதது. தேநீர், காபி மற்றும் பிற சூடான பானங்கள் சுவையை மேம்படுத்த தூள் அல்லது முழு கருப்பு மிளகு சேர்க்கலாம். இந்திய வீடுகளில் காய்கறிகள் மற்றும் கறிகள் சமைக்கும்போது பொதுவாக கருப்பு மிளகு சேர்க்காத உணவுகள இருக்காது. நீங்கள் சாலடுகள், டிரஸ்ஸிங் மற்றும் சூப்களில் கருப்பு மிளகு சேர்த்து சாப்பிலாம.

கிராம்பு நன்மைகள்

கிராம்பு மரத்தின் பூ மொட்டுகள், கிராம்புகள்  இரண்டையும் பயன்படுத்தலாம். இனிப்பு மற்றும் நறுமணம், அதிகம் உள்ள கிராம்புகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள், உள்ளன. மேலும் ஒருவரின் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய பல்துறை மசாலாவாக கிராம்பு முக்கியத்துவம் பெறுகிறது. வைட்டமின் கே, மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கிராம்புகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும். கூடுதலாக எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகின்றன.

உங்கள் தினசரி உணவில் கிராம்பை எவ்வாறு சேர்ப்பது

உங்கள் அன்றாட உணவில் அவற்றைச் சேர்ப்பது எளிது. தேநீர் தயாரிக்கும் போது கொதிக்கும் நீரில் அவற்றைச் சேர்ப்பது உங்கள் அன்றாட உணவில் அவற்றை இணைப்பதற்கான சிறந்த வழியாகும்.  அரிசியில் சேர்ப்பது, குறிப்பாக குளிர்காலத்தில் சுவாச மண்டலத்தில் செயல்படும் அரிசியின் குளிர்ச்சியான தன்மையைக் கட்டுப்படுத்த கிராம்பு ஒரு சிறந்த வழியாகும். காலையில் இரண்டு கிராம்புகளை தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.