தளபதி 67 படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?

தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்திற்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான அரபிக்குத்து பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. யூடியூப்பில் 125 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

Image

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்க போவதாகவும், அதை தில் ராஜு தயாரிக்க போவதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.தளபதி 66 படத்தின் ஷுட்டிங் மே மாதத்தில் துவங்கப்படலாம் என்றும், இந்த படத்தை 2022 ம் ஆண்டு தீபாவளி அல்லது 2023ம் ஆண்டின் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தளபதி 67 படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.லோகேஷ் கனகராஜ் தற்போது கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். விஜய், லோகேஷ் கனகராஜ் இருவரும் தாங்கள் தற்போது கமிட்டாகி உள்ள படங்களை முடித்த பிறகு தளபதி 67 படத்தின் வேலைகள் துவங்கப்படும் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.