மறக்க மாட்டோம்… பிரித்தானியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா: வெளியான பின்னணி


உக்ரைன் விவகாரத்தில் பிரித்தானியாவின் நிலை குறித்து பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது ரஷ்யா.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் உலகப் போராக வெடிக்கும் ஆபத்தை உருவாக்கியுள்ள நிலையில், பிரித்தானியாவை பகிரங்கமாக எச்சரித்துள்ளது ரஷ்யா.

போரிஸ் ஜோன்சன் நிர்வாகத்தால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளால் ரஷ்யா கடும் அதிருப்தியில் இருப்பதாக உள்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும், உக்ரைன் விவகாரத்தில் பிரித்தானியா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நடவடிக்கைகளை ஒருபோதும் ரஷ்யா மறந்துவிடாது எனவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிப்பதும் ஜெலென்ஸ்கி அரசாங்கத்திற்கு தேவையான ஆயுதங்களை வழங்குவதும் மோசமான முன்னுதாரணம் என குறிப்பிட்டுள்ள அவர், பிரித்தானியாவின் இந்த முடிவை ரஷ்யா ஒருபோதும் மறந்துவிடாது என்றார்.

பொருளாதார தடைகளை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சர், ஆனால் ரஷ்யா உடன் பகிரங்கமான ஒரு மோதலுக்கு பிரித்தானியா துவக்கமிட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரஸ்ஸோஃபோபியாவும் ரஷ்ய அரசைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கமும் பிரித்தானியாவின் வெளியுறவுக் கொள்கையின் ஒருங்கிணைந்த கூறுகள் என்பதை இத்தகைய நகர்வுகள் மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்துகிறது என்றார்.

முன்னதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அவரது வெளிவிவகார அமைச்சர் உட்பட 15 தனி நபர்கள் மீது தடைகளை விதித்து பிரித்தானியா உத்தரவு வெளியிட்டது.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியமானது விளாடிமிர் புடின் உட்பட 702 தனி நபர்கள் மீது பயணத்தடைகள் மற்றும் பொருளாதர நெருக்கடிகளை அறிவித்துள்ளது.

அப்பாவி உக்ரைன் மக்கள் மீது ரஷ்யாவின் கொடூர தாக்குதல் தொடரும் மட்டும், புடின் மீதும் அவரது ஆதராவளர்கள் மீதும் அதிகபட்ச பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவோம் என போரிஸ் ஜோன்சன் சூளுரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.