இங்க திருமணம் செய்துக்கொண்டால் 1.7 லட்சம் ரூபாய் பரிசு.. இது நல்லா இருக்கே..!

திருமணம் என்றாலே கொண்டாட்டம் தான், குறிப்பாக இந்திய திருமணங்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஆனால் சமீபத்தில் இந்தியாவில் Destination wedding, பாரின் வெட்டிங் போன்றவை மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து வருகிறது.

இதற்கு ஏற்றார் போல், உலக நாட்டு மக்களைத் தங்களது கனவு திருமணத்தை இத்தாலி நாட்டில் செய்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளது. இது மட்டும் அல்லாமல் இத்தாலியின் Lazio பகுதியில் திருமணம் செய்து கொண்டால் மிகப்பெரிய தொகையைப் பரிசாக அளிக்கவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த மனசு தான் சார் கடவுள்.. உக்ரைன் மக்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் நெட்டிசன்ஸ்..!

இத்தாலி - லாசியோ

இத்தாலி – லாசியோ

மத்திய இத்தாலியின் முக்கியமான லாசியோ பகுதியில், கொலோசியம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்கக் கட்டிடக்கலை நினைவுச் சின்னங்கள் மற்றும் ஸ்பானிஷ் படிகள் மற்றும் ட்ரெவி நீரூற்று உள்ளிட்ட பல பிரபலமான இடங்கள் உள்ளது. திருமணத் தளங்கள் அனைத்தும் லாசியோவில் அமைந்துள்ளன.

ரூ.1,67,000 வரை

ரூ.1,67,000 வரை

இந்நிலையில் லாசியோ பகுதியில் திருமணம் செய்து கொள்ள உலக நாடுகளில் இருந்து மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டவர்கள் ஈவென்ட் நிறுவனங்கள், கேட்டரிங், பூ அலங்காரம் மற்றும் இதர திருமண அலங்காரத்திற்காக அதிகளவில் செலவுக்குச் செய்ய வேண்டும் என்பதால் இத்தாலி அரசு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு 2,000 யூரோ வரை அதாவது சுமார் ரூ.1,67,000 வரை பணத்தை ரீபண்ட் அளிக்கிறது.

10 மில்லியன் யூரோ
 

10 மில்லியன் யூரோ

“Lazio with love” என்று பெயர் வைக்கப்பட்டு உள்ள இந்தத் திட்டத்திற்குச் சுமார் 10 மில்லியன் யூரோ அதாவது சுமார் 83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது இத்தாலி அரசு. இதன் மூலம் வெளிநாட்டுப் பயணிகள் மட்டும் அல்லாமல் அதிகப்படியான வர்த்தகத்தை உள்நாட்டு வர்த்தகர்களுக்கு உருவாக்கித்தர முடியும்.

ராட் கோலி - அனுஷ்கா ஷர்மா

ராட் கோலி – அனுஷ்கா ஷர்மா

பிரபலங்கள், பணக்காரர்கள் மத்தியில் திருமணங்களுக்கு இத்தாலி முக்கியம் விருப்பமான இடமாக உள்ளது. விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் திருமணம், கிம் கர்தாஷியன், கன்யே வெஸ்டின் திருமணம் எனப் பல பிரபலங்களின திருமணம் இத்தாலியில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா

கொரோனா

கொரோனா காரணமாக இத்தாலியில் குறிப்பாக Lazio திருமணம் செய்யும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்தது. இதனால் திருமணங்கள் மற்றும் கொண்டாட்டங்களைச் சார்ந்து இருக்கும் வர்த்தகம் பெரிய அளவில் பாதித்துள்ளது.

வர்த்தகம்

வர்த்தகம்

தற்போது இத்தாலியின் “Lazio with love” திட்டம் மூலம் அதிகப்படியான மக்கள் திருமணம் செய்ய இத்தாலிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் மூலம் இப்பகுதியில் வர்த்தகம் மேம்படும் எனவும் இத்தாலி மக்கள் நம்புகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Italy paying wedding couples upto Rs 1.7 lakh to host their wedding in Central Italy’s Lazio

Italy paying wedding couples upto Rs 1.7 lakh to host their wedding in Central Italy’s Lazio இங்க திருமணம் செய்துக்கொண்டால் 1.7 லட்சம் ரூபாய் பரிசு.. இது நல்லா இருக்கே..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.