இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங் வேலையைத் தூக்கிப்போடு இட்லி விற்க வந்த கிருஷ்ணன்..!

ஒரு பிஸ்னஸ்-ஐ துவங்குவதில் இருக்கும் பிரச்சனைகளை விடவும், இதை நிலையாகப் பல வருடங்கள் தொடர்ந்து நடத்துவது தான் மிகவும் சவாலான விஷயம். ஆனால் இந்தச் சவாலை ஆசை ஆசையாக ஏற்றுக்கொண்டு உள்ளார் கிருஷ்ணன் மகாதேவன்.

தங்கம் வாங்க இது சூப்பர் சான்ஸ்.. 3 நாள் ஏற்றத்திற்கு பிறகு வீழ்ச்சி.. எவ்வளவு குறைந்திருக்கு?

இட்லி விற்பனை செய்வதற்காகக் கிருஷணன் மகாதேவன் தனது இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங் வேலையைத் தூக்கிப்போட்டு 19 வருடத்திற்கு முன் தனது தந்தை துவங்கிய கடையைத் தொடர்ந்து நடத்தவும், தனது அம்மாவிற்கு உதவ வேண்டும் என்பதற்காகவும் கடையில் சேர்ந்துள்ளார்.

 கிருஷ்ணனின் தந்தை

கிருஷ்ணனின் தந்தை

2000ம் ஆண்டில் கிருஷ்ணனின் தந்தை மகாதேவன் வேலையை இழந்த காரணத்தால் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இட்லி மாவை விற்பனை செய்யத் துவங்கினார், இதன் பின்பு 2001ஆம் ஆண்டுச் செப்டம்பர் 27ஆம் தேதி நண்பர்களின் ஆலோசனைப் படி கூடுதல் வருமானத்தைப் பெறுவதற்காக முதல் முறையாக இட்லி கடையைத் திறந்தார்.

 மாதம் 1200 ரூபாய்

மாதம் 1200 ரூபாய்

பல மாதங்கள் கடுமையான முயற்சிகளுக்குப் பின்பு கிருஷ்ணனின் பெற்றோர் மகாதேவன் மற்றும் உமா தேவன் ஆகியோர் இணைந்து கடுமையாக உழைத்து தினமும் 40 ரூபாய் என மாதம் 1200 ரூபாய் சம்பாதித்து வாழ்க்கை பெரும் போராட்டத்திற்கு மத்தியில் நகர்ந்தது, தன்னுடைய 10 வயதில் இருந்து நினைவு இருப்பதாகக் கூறுகிறார் கிருஷ்ணன்.

 10 வயதில் முதல்
 

10 வயதில் முதல்

10 வயதில் முதல் காலை மற்றும் மாலையில் இட்லி தயாரிப்பில் பணியாற்றியது நினைவு இருந்ததாகவும், இதற்கு மத்தியில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார் கிருஷ்ணன். ஒருபக்கம் பண நெருக்கடி, மறுபுறம் கனவை நோக்கி ஓட்டம் எனக் கிருஷ்ணன் வாழ்க்கை நகர்ந்தது.

 கோல்ட்மேன் சாச்சஸ்

கோல்ட்மேன் சாச்சஸ்

கிருஷ்ணன் படிப்பை முடித்த பின்பு செயின்ட் ஜோசப் வணிகவியல் கல்லூரியில் பேராசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய கிருஷ்ணன், சில வருடத்தில் கோல்ட்மேன் சாச்சஸ் நிறுவனத்தில் இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங் குழுவில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.

 தந்தை மரணம்

தந்தை மரணம்

கிருஷ்ணனின் வாழ்க்கை வேகமாகச் சென்று இருக்க 2009 மார்ச் மாதத்தில் அவரது தந்தை மரணம் அடைந்தார். இதன் பின்பு தனது தாய் உமா இட்லி கடையை நடத்தி வந்தாலும், கிருஷ்ணன் கடை வேலை என இரண்டையும் சமாளித்துப் பணியாற்றி வந்தார்.

 ராஜினாமா

ராஜினாமா

இந்தச் சூழ்நிலையில் கிருஷ்ணன் தனது தாயின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் டிசம்பர் 2020ல் தனது வேலையை விடுத்து முழு நேரமாகத் தனது தந்தை துவங்கி ஐயர் இட்லி கடையில் பணியாற்ற துவங்கினார்.

 30 ரூபாய்

30 ரூபாய்

கிருஷ்ணன் நிர்வாகம் செய்து வரும் ஐயர் இட்லி கடையில் 3 இட்லி மற்றும் சட்னி விலை 30 ரூபாய். மேலும் இந்தக் கடையில் கடந்த 7.5 வருடமாக விலை உயர்த்தப்படவில்லை என்பது கூடுதல் தகவல். பெங்களூரில் விக்னன் நகரில் இயங்கி வரும் இந்தக் கடையில் ஒரு மாதம் 1.5 டன் அரிசி மற்றும் 1 டன் உளுத்தம் பருப்புப் பயன்படுத்தப்படுவதாகக் கிருஷ்ணன்.

 100 மடங்கு வளர்ச்சி

100 மடங்கு வளர்ச்சி

2001ஆம் ஆண்டில் இருந்து எங்களுடைய வர்த்தகம் 100 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் கிருஷ்ணன், மேலும் இவர்களுடைய ஐயர் இட்லி கடையைத் தேடி பெங்களூரை சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்து சாப்பிடவதாக, வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Krishnan Left Investment Banking Job to Sell Idlis in Bengaluru

Krishnan Left Investment Banking Job to Sell Idlis in Bengaluru இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங் வேலையைத் தூக்கிப்போடு இட்லி விற்க வந்த கிருஷ்ணன்..!

Story first published: Sunday, March 6, 2022, 19:35 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.