உக்ரைனின் வினிஸ்டா விமான நிலையத்தை அழித்து நொருக்கிய ரஷ்யா படைகள்



உக்ரைன் – ரஷ்யா போர் இன்று 11 ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் வான்வெளி தாக்குதல் மூலம் உக்ரைனின் வினிஸ்டா விமான நிலையம் அழிக்கப்பட்டுள்ளது.

மேலும் உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி வடக்கு பகுதியில் 64 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரஷ்ய படைகள் அணிவகுத்து வரும் செயற்கை கோள் புகைப்படம் வெளியாகியுள்ளதுடன்,தலைநகர் கீவ்வில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் ரஷ்ய படைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், உக்ரைன் மீதான வான்வெளியை அனைத்து நாடுகளும் மூட வேண்டும் என்றும், போரிட எங்களுக்கு போர் விமானத்தை கொடுக்க வேண்டும் உலக நாடுகளிடம் உக்ரைன் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்….

ரஷ்யாவின் 80 விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்! தடுமாறும் ரஷ்யா இராணுவம்

நான்கு லட்சம் பேரை பிணைக் கைதிகளாக பிடித்த ரஷ்யா! தொடரும் தாக்குதல்கள்

வடக்கு, மேற்கு பகுதிகளில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்யா படைகள் நெருங்கியது




Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.