ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

உக்ரைன் போர் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைந்திருக்கிறது. இந்த போர் தொடர்பாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்புகளில் இந்தியா பங்கேற்கவில்லை.

பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரஷ்யா ரத்து செய்ததால், ஐ.நா. பொது சபை அவசரமாக கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில்ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டு கடந்த 2-ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதை இந்தியா புறக்கணித்தது. எனினும் 141 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து சர்வதேச அணுசக்தி முகமையில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உக்ரைனில் அமைந்துள்ள அணு மின் நிலையங்கள் மீது ரஷ்யா எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று தீர்மானத்தில் வலியுறுத் தப்பட்டது. அந்த தீர்மானம் மீது கடந்த 3-ம் தேதி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.

இந்த சூழலில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலிலும் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

இத்தீர்மானம் மீது ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தலைமையகத்தில் நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 47 உறுப்பினர்கள் கொண்ட கவுன்சிலில் அமெரிக்கா,பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 32 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், சூடான், வெனிசுலா உட்பட 13 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. ரஷ்யாவும், எரித்ரியாவும் தீர்மானத் துக்கு எதிராக வாக்களித்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.