தனுஷை காப்பாற்ற களத்தில் இறங்கிய பிரபலம் ..நல்லது நடந்தா சரி..!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். சினிமாவில் அவர் சந்திக்காத தோல்விகளும் இல்லை, பார்க்காத வெற்றியும் இல்லை. இடையில் சில தோல்விகளை
தனுஷ்
சந்தித்து வந்தாலும் சரியான நேரத்தில் அவருக்கு சில படங்கள் கைகொடுத்து தூக்கிவிட்டுள்ளது.

துள்ளுவதோ இளமை படம் என்னதான் வெற்றிப்படமாக இருந்தாலும் அப்படத்தின் மூலம் தனுஷ் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். அந்த நேரத்தில் செல்வராகவனின் முதல் படமான
காதல் கொண்டேன்
தனுஷை ஒரு சிறந்த நடிகராக தமிழ் சினிமாவிற்கு அடையாளம் காட்டியது.

தனுஷிற்கு வலை விரிக்கும் அந்த நடிகை…விரைவில் நல்ல செய்தி?

அதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் திரைப்படம் அவரை ஆக்க்ஷன் ஹீரோவாக தமிழ் சினிமாவில் நிலைநிறுத்தியது. அதன் பின் சில தோல்விகளை சந்தித்த தனுஷிற்கு மீண்டும் வெற்றிமாறன் கைகொடுத்தார். 2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் இரண்டாவது படமாக வெளியான ஆடுகளம் திரைப்படம் அவருக்கு தேசிய விருதைப்பெற்று தந்து பாலிவுட் வரை தனுஷை அழைத்து சென்றது.

தனுஷ்

இந்நிலையில் இடையில் அவ்வப்போது தனுஷ் சறுக்கினாலும் அவருக்கு சரியான நேரத்தில் அமையும் படங்கள் அவருக்கு கைகொடுத்துள்ளது. அதேபோல் தான் 2014 ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி படமும். அந்த சமயத்தில் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி காத்திருந்த தனுஷிற்கு அவரின் 25 ஆவது படமாக வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படம் மெகாஹிட்டானது.

தனுஷ்

இந்நிலையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் OTT யில் வெளியான ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே கட்டாய வெற்றியை எதிர்பார்த்திருக்கும் தனுஷ் தற்போது அவரின் அண்ணன்
செல்வராகவன்
இயக்கத்தில்
நானே வருவேன்
படத்தில் நடித்து வருகிறார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் – செல்வராகவன் -யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் இப்படம் உருவாவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. தற்போது செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்திலிருந்து ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. தனுஷுடன் செல்வராகவனும் அந்த போஸ்டரில் தோன்றுகிறார்.

தனுஷ்

இதை வைத்து பார்க்கையில் தனுஷுடன் செல்வராகவனும் இப்படத்தில் நடிப்பதாக ரசிகர்கள் கருதி வருகின்றனர். எனவே கட்டாய வெறியை எதிர்நோக்கியுள்ள தனுஷிற்காக அவரது அண்ணன் செல்வராகவன் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார் என ரசிகர்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சால்ட் & பெப்பர் தாடியும், காதில் கடுக்கனும்’ அஜித்தின் நியூ லுக்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.