பட்டாம்பூச்சிகளின் சிறகுகள் | உலக சினிமா #MyVikatan

13வது பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழா மார்ச் 3 அன்று கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மிகச்சிறந்த திரைப்படங்களை மிகச்சிறந்த திரையரங்குகளில் திரையிட்டு காட்டுவதில் பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழா கோவா பனாட்டு திரைப்பட விழாவுக்கு இணையானது.

திரையிடல் தொடங்கிய முதல்நாள் முதல் காட்சியில் பார்த்த திரைப்படம் ‘லுஅக்கிங் பார் வெரனா. முதல் படமே முதன்மையான படமாக திகழ்ந்தது. புதுமுக பெண் இயக்குநர் நொரிகா சேபா கை தேர்ந்த திரைமேதைகளைப்போல் காட்சிகளையும் சட்டகங்களையும் உருவாக்கி மிரட்டி இருந்தார். எனவேதான் இவரது முதல் படமே ரோட்டர்டாம் பன்னாட்டு விழாவின் உயரிய ‘தங்கப்புலி விருது’ போட்டியிக்கான தேர்வில் இடம் பெற்றது.

Looking For Venera

கொசாவா நாட்டில் வளர்ச்சிக்கான அடையாளங்கள் துளியும் இல்லாத ஒரு சிறு நகரத்தில் கதையின் களம் முகாமிட்டு இருக்கிறது. அழகிய மலைகளும் காடுகளும் செழுமையாக இருந்தாலும் போரில் சிதிலமடைந்து வளர்ச்சி எட்டிப்பார்க்காத வட இந்திய நகரங்கள் போல் காட்சியளிக்கிறது.

வெரனா எனும் இளம் பெண் தன் சம வயது தோழி டொரினோ துணையுடன் பதின்வயது கனவுகளை நனவாக்க பறக்கிறாள். இரண்டு பட்டாம்பூச்சிகளும் திருமணத்துக்கு முன்பாக அனைத்து சுதந்திரங்களையும் தந்திரமாக பெற்று விட முயற்சிக்கிறார்கள். பண்பாடு,கலாசாரம் எனும் பெயரில் தினந்தோறும் இவர்களது சிறகுகளை கத்தரித்துக்கொண்டே இருக்கிறார்கள் குடும்பமும் சமூகமும்.

ஆணாதிக்க சமூகத்தின் ஒன்றிய அமைச்சராக திகழும் வெரனாவின் தந்தை வெரனாவாச் சுற்றி வேலி எழுப்பிக் கொண்டே இருக்கிறார். வேலி தாண்டிய வெள்ளாடு ஆக வெரனா தினமும் வெள்ளிப்பதக்கம் பெறுவதில் வெற்றி கொள்கிறாள்.

வெரானா, வெரனாவின் தாயார், வெரானாவின் பாட்டி [ தந்தையின் தாயார்] என மூன்று தலைமுறைப்பெண்கள் ஆணாதிக்க சமூகத்தில் விலங்குகள் பூட்டப்பட்ட விலங்குகளாக வாழ்வதை மிகச்சிறப்பாக சித்தரித்து இருக்கிறார் இயக்குநர் நொரிகா சேபா.

Looking For Venera
Looking For Venera
Looking For Venera
Looking For Venera

படத்தின் இறுதிக்காட்சியில் குறியீடாக ஒரு காட்சியை கட்டமைத்துள்ளார். அந்தக் காட்சியின் ஒளிப்பதிவு கட்டமைப்பும், நேரடி ஒலிப்பதிவு செய்த விதமும், ஒலி வடிவமைப்பும் உலகில் எந்த சினிமாவும் இது வரை பதிவு செய்ததில்லை. உலக சினிமாக்காட்டில் புத்தம் புதிய பட்டாம்பூச்சி ‘லுக்கிங் பார் வெரனா’.

Looking For Venera | Running time: 111 MIN. (Original title: “Në kërkim të | Producer: Besnik Krapi |Crew: Director, writer: Norika Sefa. Camera: Luis Armando Arteaga. Editors: Stefan Stabenow, Sefa | With: Kosovare Krasniqi, Rozafa Çelaj, Erjona Kakeli, Basri Lushtaku, Bleon Monolli

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.