விசா, மாஸ்டர்கார்டு சேவை நிறுத்தம்: உடனடியாக சீனாவுடன் கூட்டணி வைத்த ரஷ்யா


ரஷ்யாவில் விசா மற்றும் மாஸ்டர்கார்டு செயல்பாடுகளை நிறுத்துவதாக கூறியதை அடுத்து, சற்றும் யோசிக்காமல் சீன நிறுவனத்துடன் ரஷ்யா கூட்டணி வைத்துள்ளது.

விளாடிமிர் புடினின் பொருளாதாரத்திற்கு ஒரு புதிய அடியாக ரஷ்யாவில் விசா (Visa) மற்றும் மாஸ்டர்கார்டு (MasterCard) தங்கள் செயல்பாடுகளை இடைநிறுத்துவதாக அறிவித்தன.

“உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகளை நாங்கள் கண்டதைத் தொடர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்று விசா தலைமை நிர்வாக அதிகாரி அல் கெல்லி கூறினார்.

அதன்படி, ரஷ்ய வங்கிகளால் வழங்கப்படும் அனைத்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளும் இனி நாட்டிற்கு வெளியே வேலை செய்யாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், இதற்கெல்லாம் சற்றும் தளராத, விசா மற்றும் மாஸ்டர்கார்டு அவற்றின் செயல்பாடுகளை நிறுத்துவதாக கூறியதை அடுத்து, ரஷ்யாவின் சொந்த மிர் நெட்வொர்க்குடன் (Mir network) இணைந்து சீன யூனியன் பே (UnionPay) கார்டு ஆபரேட்டர் அமைப்பைப் பயன்படுத்தி விரைவில் அட்டைகளை வழங்கத் தொடங்குவதாக பல ரஷ்ய வங்கிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

UnionPay-க்கு மாறுவது தொடர்பான அறிவிப்புகள் ரஷ்யாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனமான ஸ்பெர்பேங்க் (SBER.MM) மற்றும் Alfa Bank மற்றும் Tinkoff ஆகியவற்றிலிருந்து வந்தன.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.