சர்வதேச பர்னிச்சர் பூங்கா: ஜெர்மனி, பெல்ஜியம் நிறுவனங்கள் ரெடி.. ஆரம்பமே அசத்தல்..!

தமிழ்நாடு அரசு தொடர்ந்து வெளிநாட்டு நிறுவனங்களின் வாயிலாக முதலீட்டை ஈர்த்து மாநிலத்தின் வர்த்தகம், உற்பத்தி, வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறது.

மேலும் தமிழ்நாட்டு உள்நாட்டு வர்த்தகத்திற்கான பொருட்களைத் தயாரிப்பதைக் காட்டிலும் ஏற்றுமதி வர்த்தகத்தைச் சார்ந்த பொருட்களைத் தயாரிப்பது தான் நீண்ட கால வளர்ச்சிக்கும், வர்த்தக வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

இதன் அடிப்படையில் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாகச் சர்வதேச பர்னிச்சர் பூங்கா-வை உருவாக்கப்பட்டு உள்ளது தமிழக அரசு.

ஓசூரில் நிலத்தை வாங்கி குவிக்கும் தமிழ்நாடு அரசு.. அடுத்த சென்னை ஓசூர்-தானா..!!

 சர்வதேச பர்னிச்சர் பூங்கா

சர்வதேச பர்னிச்சர் பூங்கா

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்தப் பூங்காவில் ஆரம்பத்திலேயே இரு வெளிநாட்டு நிறுவனமும் ஒரு உள்நாட்டு நிறுவனமும் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

 தூத்துக்குடி சிப்காட்

தூத்துக்குடி சிப்காட்

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் சுமார் 1,150 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,000 கோடியில் சர்வதேச பர்னிச்சர் பூங்கா உருவாக்கப்பட உள்ளதாக மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் பேசினார். இந்தியாவிலேயே முதல் முறையாகச் சர்வதேச பர்னிச்சர் பூங்கா தூத்துக்குடியில் தான் அமைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

 ஹெட்டிச் குரூப்
 

ஹெட்டிச் குரூப்

இந்தப் பூங்காவில் ஜெர்மன் நாட்டின் ஹெட்டிச் குரூப் நிறுவனம் பர்னிச்சர்களுக்கான பிட்டிங்க்ஸ் தயாரிப்பதற்காக 750 கோடி ரூபாய் முதலீட்டைச் செய்ய உள்ளது. மேலும் இந்த முதலீட்டு மூலம் சுமார் 700 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Deceunick நிறுவனம்

Deceunick நிறுவனம்

இதேபோல் பெல்ஜியம் நாட்டின் Deceunick நிறுவனம் சுமார் பர்னிச்சர் உற்பத்திக்காக 400 கோடி ரூபாய் முதலீட்டை செய்ய உள்ளது. இந்த முதலீட்டு மூலம் Deceunick நிறுவனத்தின் தூத்துக்குடி உற்பத்தி நிறுவனத்தில் மட்டும் சுமார் 250 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 நியூ சென்சூரி சோபா

நியூ சென்சூரி சோபா

இதோடு இந்திய நிறுவனமான நியூ சென்சூரி சோபா லிமிடெட் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள சர்வதேச பர்னிச்சர் பூங்காவில் சுமார் 600 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் தொழிற்சாலையில் 4000க்கும் அதிகமாக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஏன் தூத்துக்குடி

ஏன் தூத்துக்குடி

சர்வதேச பர்னிச்சர் பூங்கா-வை தூத்துக்குடியில் உருவாக்க முக்கியமான காரணம் உண்டு. சென்னையில் ஏற்கனவே அதிகப்படியான நெரிசல் மற்றும் மக்கள் தொகை அதிகமாகியுள்ள நிலையில் பல நிறுவனங்கள் கோவை, ஒசூர் பகுதிகளுக்குத் திருப்பிடப்பட்டு வருகிறது.

 துறைமுகம்

துறைமுகம்

ஆனால் பர்னிச்சர் உற்பத்தி துறையில் தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முக்கியமான தேவை ஏற்றுமதி. இதனாலேயே சர்வதேச பர்னிச்சர் பூங்கா-வை தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி துறைமுகம் தமிழகத்தில் 2-வது பெரிய துறைமுகம். இந்திய அளவில் 3-வது பெரிய துறைமுகம் ஆகும்.

 தென்கிழக்கு நாடுகள்

தென்கிழக்கு நாடுகள்

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் நாடுகளில் இருந்து கப்பல்களுக்கும் தூத்துக்குடி துறைமுகம் தான் நுழைவு வாயில். அதனால் சென்னை துறைமுகத்தைப் போலவே தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பருதிகளுக்கு ஏற்றுமதி வர்த்தகத்தை உருவாக்க இந்தச் சர்வதேச பர்னிச்சர் பூங்கா துவக்க புள்ளியாக இருக்கும்.

 3 முதலீட்டாளர்கள் மாநாடு

3 முதலீட்டாளர்கள் மாநாடு

திராவிட மாடல்படி ஆட்சி நடந்து கொண்டு இருக்கும் காரணத்தால் கடந்த 10 மாதங்களில் தமிழ்நாட்டில் 3 முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று இருக்கிறது. 2 மாநாடு சென்னையிலும், ஒன்று கோவையிலும் நடத்தப்பட்டு உள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Germany Hettich, Belgium Deceunick setting Furniture manufacturing unit in New Tuticorin Furniture Park

Germany Hettich, Belgium Deceunick setting Furniture manufacturing unit in New Tuticorin Furniture Park சர்வதேச பர்னிச்சர் பூங்கா: ஜெர்மனி, பெல்ஜியம் நிறுவனங்கள் ரெடி.. ஆரம்பமே அசத்தல்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.