மறுக்கும் திமுக நகராட்சி தலைவர்; ‘டெட்லைன்’ கொடுத்த தங்கத்தமிழ்செல்வன்-தேனியில் பரபரப்பு

கட்சி கட்டுப்பாட்டை மீறி தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக கவுன்சிலர் ரேணு பிரியா ராஜினாமா செய்ய மாலை 5 மணி வரை கொடுக்கப்பட்ட “டெட் லைன்” 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தங்கத்தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
தேனி-அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 19-வார்டு களையும் அதன் தோழமைக் கட்சியான காங்கிரஸ கட்சி இரண்டு வார்டுகளையும் அமமுக இரண்டு இரண்டு வார்டுகளையும், என அதிமுக 7 வார்டுகளிலும் சுயேப்சைகள் வார்டையும் கைப்பற்றியிருந்தனர்.
தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவி திமுக அவருக்கு தான் வழங்கப்படும் என்று அக்கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். தலைவி பதவிக்கான வேட்பாளராக தற்போதைய திமுக நகரச் செயலாளராக இருக்கும் பாலமுருகனின் மனைவி ரேணு ப்ரியாதான் நகராட்சி தலைவர் வேட்பாளர் என்ற பேச்சு அடிபட்டது. ஏனென்றால் தேனி அல்லிநகரம் நகராட்சி வரலாற்றில் முதன்முறையாக திமுக அதிக இடங்களை கைப்பற்றி திமுக வைச் சேர்ந்த முதல் தலைவர் பொறுப்பேற்க உள்ளதாகவும் கூறப்பட்டது. 1962 ஆம் ஆண்டு தேனி அல்லிநகரம் நகராட்சி மூன்றாம் நிலை நகராட்சியாக உருவெடுத்த காலத்தில் இருந்து தற்போதுவரை நகராட்சித் தலைவர் பதவி திமுக அவருக்கு கிடைக்காத நிலை இருந்து வருகிறது.
உள்ளாட்சி அமைப்பு பங்கீட்டு அடிப்படையில் திமுகவினருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் இருபத்தி இரண்டாவது வார்டில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சற்குணம் நகராட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்த படி திமுக நகர செயலாளர் பாலமுருகனின் மனைவி பானுப்பிரியா கட்சித் தலைமையின் அறிவிப்பையும் மீறி வேட்புமனு தாக்கல் செய்து தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
image
கூட்டணி கட்சி தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்த திமுக கட்சி தலைமையிலிருந்து அதிரடி அறிவிப்பு வெளியானது. தனிக்கட்சி தர்மப்படி தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் கட்சி கட்டுப்பாட்டை மீறி தலைவர் பொறுப்பேற்றுள்ள அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தன்னை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஒரு அறிக்கை வெளியிட்டு 4 நாட்களாகியும் தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள அனுப்பிரியா நகராட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவில்லை. திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் தேனியில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்ட இணைபிரியா ராஜினாமா செய்ய மறுத்து வருவதாக திமுக கூட்டணி கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் இழுபறி நீடித்து வருகிறது.
இதனிடையே, இதுதொடர்பாக பேசிய தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்செல்வன், “திமுக தலைமைக் கழக உத்தரவுபடி காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்ட தேனி அல்லிநகரம் நகராட்சியில் கூட்டணி தர்மத்தை மீறி நகராட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திமுக கவுன்சிலர் ரேணுப்பிரியா மாலை 5 மணிக்குள் ராஜினாமா செய்யாவிட்டால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்” என தேனியில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், 5 மணிக்குள் ரேணுப்பிரியா ராஜினாமா செய்யாத நிலையில், 8 வரை என டெட்லைனை நீட்டிப்பதாக தங்கத்தமிழ்செல்வன் தற்போது தெரிவித்துள்ளார். 
ஆனால் இதுவரை கூட்டணி கட்சி தர்மத்தை மீறி நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட திமுகவின் கவுன்சிலரான ரேணுப்ரியா, மற்றும் திமுகவின் இதர கவுன்சிலர்கள், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்திற்கு வரவில்லை என்றும் திமுக கவுன்சிலர் ரேணுப்பிரியா மற்றும் அவரது கணவர் பாலமுருகன் ஆகியோர் தொலைபேசி அழைப்புகளையும் எடுக்க மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.