வீழ்ச்சியில் பங்குச்சந்தைகள்; உச்சத்தில் தங்கம் விலை| Dinamalar

புதுடில்லி: ரஷ்யா – உக்ரைன் போர் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. அதேபோல், தங்கம் மற்றும் வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டியது.

ரஷ்யா – உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போர் 12வது நாளாக தொடர்ந்து வருவதால் உலகளாவிய பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய பங்குச்சந்தைகளும் கடும் சரிவை சந்தித்துள்ளன. காலை 10:15 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,433 புள்ளிகள் சரிந்து 52,890 ஆக வர்த்தகமாகின. தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 430 புள்ளிகள் சரிந்து 15,815 ஆகவும் வர்த்தகமாகின.

தங்கம் விலை

இந்த போர் எதிரொலியாக, ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலையும் தொடர் உயர்வை சந்தித்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து முதன்முறையாக ரூ.40,440ஐ தொட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை ரூ.85 உயர்ந்து ரூ.5,055 ஆக விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.1,800 உயர்ந்து ரூ.75,200 ஆக உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.