இமாச்சலப் பிரதேசத்தில் மலைப்பாதையில் வாடகைக் கார் ஓட்டும் இளம் பெண் மீனாட்சி.!

இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் மலைப்பாதைகளில் வாடகைக் கார் ஓட்டும் இளம் பெண் மீனாட்சி பெண்களின் உறுதிக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

பெண்கள் சுயமான முன்னேற்றத்தை அடைய முடியும் என்று உலக மகளிர் தினத்தையொட்டி அவர் தெரிவித்தார். மீனாட்சி நேகி என்ற இந்த இளம் பெண் கரடுமுரடான பனிபடர்ந்த மலைப்பாதைகளில் லாவகமாக காரை ஓட்டிச் சென்று சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்கிறார்.

எந்த வித நிர்ப்பந்தமும் இல்லாமல் விரும்பி இந்தத் தொழிலை மேற்கொண்டதாகக்கூறும் மீனாட்சி மலைப்பாதையில் காரை ஓட்டுவது மிகவும் பிடித்திருப்பதாகக் கூறுகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.