மகளிர் தினத்தை முன்னிட்டு ஒருநாள் காவல்துறை அதிகாரியான கல்லூரி மாணவி

உலகம் முழுவதும் மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையடுத்து புதுச்சேரி காவல் துறை சார்பில், பாரதிதாசன் அரசு கல்லூரி மாணவி நிவேதாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இன்று அவர் முத்தியால்பேட்டை காவல்நிலைய அதிகாரியாக பணியாற்றுகிறார்.

NCC உடையில் முத்தியால்பேட்டை காவல்நிலையம் வந்த மாணவியை காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் காவல்நிலைய அதிகாரியின் இருக்கையில் அமரவைத்தனர்.

இன்று ஒருநாள் கல்லூரி மாணவி முத்தியால்பேட்டை காவல்துறை அதிகாரியின் அன்றாடப் பணிகளை மேற்கொள்வார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.