முன்னாள் அமைச்சருடன் சந்திப்பு : சீரியல் நடிகைகளின் மகளிர் தின வாழ்த்துக்கள்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் ஆண்களுக்க நிகராக பெண்களும் தங்களது திறமையை வெளிகாட்டி வருகின்றனர். அதிலும் சில துறைகளில் ஆண்களை விட பெண்களே முன்னணியில் இருந்து வருகின்றனர். இப்படி பெணகளின் வளர்ச்சி அதிகமாகி கொண்டே போனாலும் ஆண்களால் அவர்களுக்கு ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல் இன்னும் குறைந்தபாடில்லை.

பெண்கள் எப்போது நடு இரவில் தனியாக நடந்து செல்கிறார்களே அப்போதூன் இந்தியாவிற்கு முழுமையான சுதந்திரம் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். ஆனால் அவரது கருத்து இன்னும் நிறைவேறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இரவில் ஒரு பெண் தனியாக நடந்து சென்றால் அவர் முழுமையாக வீடு வருவரா அல்லது அவர் நடந்து வரும்போது பயம் இல்லாமல் இருந்தாரா என்று கேட்டால் அனைவரிடமும் இல்லை என்றுதான் பதில் வரும்.

தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவி சொல்வது போல் ஆணை பலமாக படைத்ததே பெண்களை பாதுகாக்கத்தான் ஆனால் இங்கு பல பெண்கள் அந்த வலிமை மிக்க ஆண்காளால் பல துன்பங்களை அனுபவித்து வருகினறனர். அந்த அளவிற்கு பெண்கள் மீதான வன்கொடுமைகள் பெருகி வரும் இந்த சூழலில், பெரும்பாலான பெண்கள் தங்களது வாழ்கைளில் பெரிய பெரிய சாதனைளை படைத்து வருகின்றனர். இதனை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் ஆண்கள் மட்டுமல்லால் பல தரப்பினரும் தங்களது தோழிகள், சகோதர சகோதரிகள், என பலருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சீரியலில் நடித்து புகழ்பெற்றுள்ள பல நடிகர் நடிகைகள் மகளிர் தினத்தில் மற்ற பெண்களுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறுவது உண்டு. அந்த வகையில் சீரியல் நடிககைள் மகளிர் தினத்தில் வெளியிட்டுள்ள ஸ்பெஷல் புகைப்படங்கள் இங்கு பார்க்கலாம்.

சுஜிதா தனுஷ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகை சுஜிதா தனுஷ் மகளிர் தினத்தில் பாடல் ஒன்றுடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் உங்கள் மௌனத்திற்கு தகுதியானவர்களிடம் வார்த்தைகளை வீணாக்காதீர்கள்  என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் நடிகை சுஜாவருணி

தமிழில் ஒரு சில படங்களில் நடித்தள்ள இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றார். இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு முன்னாள் நடிகை ஸ்ரீப்ரியாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சுஜா நாங்கள் அனைவரும் ஒன்றுதான்… நாங்கள் பெண்கள் என்று பதிவிட்டுள்ளார்.  மேலும் துணிச்சலான மற்றும் அன்பான பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

ரித்திகா

பாக்யலட்சுமி சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகை ரித்தியா தமிழ் உலக மகளிர் தினத்தில் கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவை சந்தித்துள்ளார். பெண்கள் தினத்தில் அவரை சந்தித்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும், இந்த அற்புதமான நாளில், அழகான மற்றும் வலிமையான பெண்கள் அனைவருக்கும் இனிய மகிழ்ச்சியான பெண்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.