ஹாலிவுட்டில் அறிமுகமாகும் ஆலியா பட் – வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

பாலிவுட் நடிகை ஆலியா பட் நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் படத்தின் மூலம் ஹாலிவுட் படத்தில் அறிமுகமாக உள்ளார்.

இயக்குநர் மகேஷ் பட்டின் மகளும், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையுமாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம் ‘கங்குபாய் கத்தியவாடி’. இந்தப் படத்திற்கு அடுத்து, ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வரும் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

image

இந்நிலையில், ஹாலிவுட் படங்களில் கலக்கி வரும் பாலிவுட் நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே வரிசையில் நடிகை ஆலியா பட் இணைந்துள்ளார். ‘Wonder Woman’ ஹீரோயின் கல் கடோட் (Gal Gadot) மற்றும் ’50 Shades’ புகழ் ஜேமி டோர்னன் (Jamie Dornan) உடன் ஆலியா பட் இணைந்து நடிக்க உள்ளார். நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினலாக உருவாகும் இந்தப் படத்தை, ஸ்கைடான்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட உள்ளார்கள்.

image

சர்வதேச ஸ்பை திரில்லராக இந்தப் படம் உருவாக உள்ளது. ‘The Aeronauts’, ‘Wild Rose’, ‘The Woman In Black 2’ உள்ளிட்ட படங்களை இயக்கிய டாம் ஹார்பர் (Tom Harper) இயக்குகிறார். ‘Heart Of Stone’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், ஆலியா பட் இணையவுள்ள அறிவிப்பை நெட்ஃபிளிக்ஸ் தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. இதையடுத்து இந்திய திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.