ஓய்வை அறிவித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

திருவனந்தபுரம்:
ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் டொமஸ்டிக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2006 முதல் 2011 வரை விளையாடியவர் ஸ்ரீசாந்த். இவர் ஸ்பாட் ஃபிக்ஸிங் புகாரில் சிக்கி 7 ஆண்டுகள் தடையை எதிர்கொண்டவர். தடை முடிந்த கையோடு டொமஸ்டிக் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்தார்.

கேரள அணிக்காக கடந்த பிப்ரவரியில் மெகாலயா அணிக்கு எதிராக ரஞ்சிக் கோப்பையில் விளையாடி இருந்தார். அந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இந்த நிலையில் டொமஸ்டிக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தனது ஒய்வு குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த தலைமுறையை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் நலன் கருதி எனது முதல் தர கிரிக்கெட் கெரியரை இத்துடன் முடித்துக் கொள்ள நான் முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.