சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் அதி நவீன வசதிகளுடன் கூடிய உல்லாச படகுச் சேவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்துவைப்பு

யாழ் மாவட்டத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் முகமாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் உல்லாசத்துறை ஆடம்பர படகு சேவையின் வெள்ளோட்ட நிகழ்வு இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

யாழ் குடாநாட்டின் சுற்றுலா பயணிகளின் எண்ணங்களை நிறைவேற்ற “விக்டோரியா இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்” (Victoria international private Limited) மற்றும் “லியானா கடல் உணவு” தனியார் கூட்டு நிறுவனம் ஆகியன இணைந்து (Liyana sea food) முன்னெடுத்துள்ள கடல் சுற்றுலா படகான “விக்லியா” (“VICLIYA”) படகின் வெள்ளோட்ட நிகழ்வு இன்றையதினம் குருநகர் இறங்கு துறையில் நடைபெற்றது.

இந்த உல்லாசப்படகின் வெள்ளோட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்த அமைச்சர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த திட்டத்தை முதலீடு செய்து முன்னெடுத்து முயற்சியாளர்களுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் இந்த உல்லாச சேவையின் மேம்பாட்டை முன்னெடுப்பதற்கு இப்பகுதி மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்’று சுட்டிக்காட்டியிருந்த அமைச்சர் இதை மேலும் விரிவாக்கம் செய்து பலதரப்பட்ட பிரதேசங்களிலிருந்தும் குறிப்பாக வெளிநாடுகளின் உல்லாச பயணிகளையும் இப்பகுதிக்கு வருகைதருவதை ஊக்கப்படுத்தும் வகையிலான மேம்படுத்தப்பட்ட செயற்றிட்டங்களை மேற்கொள்வதற்கு தம்மாலான ஒத்துழைப்புக்ளையும் வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதேவேளை சுற்றுலாப்பயணிகளுக்கான குறித்த நவின வசதிகளுடன் கூடிய ஆடம்பர குளிருட்டப்பட்ட உல்லாசப் படகு சேவையானது யாழ்நகரை அண்டிய சிறுத் தீவிலிருந்து முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.