திருவிழாவில் பலூன் விற்ற பெண் திடீர் மாடலாகி பிரபலமானார்| Dinamalar

திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த திருவிழாவில், பலூன் விற்ற பெண் ஒருவர், திடீர் பிரபலமாகி மாடலாக மாறி உள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூரில் அண்டலூர் காவு திருவிழா நடந்தது. சுற்றுவட்டார மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த விழாவில், அர்ஜூன் கிருஷ்ணன் என்ற புகைப்பட கலைஞர் புகைப்படம் எடுத்துள்ளார்.

அப்போது, அவரது பார்வையில், கிஷ்பு என்ற பெண் பட்டுள்ளார். அவரது நேர்த்தியை கண்டு, வியந்த அர்ஜூன் உடனடியாக அந்த பெண் மற்றும் தாயாரின் அனுமதியுடன் விதவிதமாக புகைப்படம் எடுத்துள்ளார். கிஷ்பு ராஜஸ்தானை சேர்ந்தவர் என தெரிய வருகிறது. தொடர்ந்து, அர்ஜூன் கிருஷ்ணன் தான் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இது வைரலாக பரவ துவங்கியது. பலரும், கிஷ்புவை ரசித்து பகிர்ந்தனர்.

புகைப்படத்திற்கு வரவேற்பை கண்டு அதிசயித்த அர்ஜூன், கிஷ்புவை தொடர்பு கொண்டு மாடலிங்காக மாற்றி புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டார். இதற்கு அவரும் ஒப்பு கொண்டதால், ரம்யா என்ற ஒப்படை கலைஞர் உதவியுடன் வித விதமாக அலங்காரம் செய்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார். இதற்கும் பலத்த வரவேற்பு கிடைத்ததுடன், அர்ஜூனுக்கும் பல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. கிஷ்புவும் பல நிறுவனங்களுக்கு மாடலாக ஒப்பந்தமாகி உள்ளார். இதற்காக அவருக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.