பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பெண் நன்றி!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்கு அசாதாரமாண சூழல் நிலவி வருகிறது. ரஷ்ய படைகள் மொழியும் குண்டு மழையில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால், உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர்.

உக்ரைனில் இருந்துசுமார் 10 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நா., சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து வெளியேறிய பெரும்பானால மக்கள் அண்டை நாடுகளான போலாந்து, ஹங்கேரி, ஸ்லொவாக்யா, ருமேனியா மற்றும் மால்டோவா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா., சபை தெரிவித்துள்ளது.

அதேசமயம், படிப்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்காக சென்று உக்ரைனில் சிக்கியுள்ள தங்களது நாட்டவர்களை வெளியேற்றும் முயற்சிகளில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில்,
ஆப்ரேஷன் கங்கா
என்ற பெயரில் உக்ரைனில் சிக்கியுள்ள சுமார் 20,000 இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போரில் திடீர் திருப்பம்: நேட்டோ விருப்பதை கைவிடுவதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு!

அங்கிருந்து, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இந்திய விமானப்படையின் விமானங்கள் மூலம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்த ஆஸ்மா ஷபிக்யூ என்ற பெண்ணை இந்தியா மீட்டுள்ளது. தன்னை மீட்டதற்கு உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் இந்திய பிரதமர் மோடிக்கும்
பாகிஸ்தான் பெண்
ஆஸ்மா நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அதிகாரிகளால் மீட்கப்பட்டு, மேற்கத்திய உக்ரைனுக்கு செல்லும் அப்பெண் அங்கிருந்து பாகிஸ்தான் அரசால் தாயகம் அழைத்துச் செல்லப்படுவார் என தெரிகிறது.

இதுகுறித்து ஆஸ்மா ஷஃபிக் கூறுகையில், “என் பெயர் ஆஸ்மா ஷஃபிக். நான் பாகிஸ்தானை சேர்ந்தவள். உக்ரைனில் மிகவும் கடுமையான சூழ்நிலையில் சிக்கித்தவித்த என்னை மீட்பதில் உதவிய கீவ்-இல் உள்ள இந்திய தூதரகத்திற்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களை ஆதரித்ததற்கு நன்றி. இந்திய தூதரகத்தால் நான் நிச்சயம் பாதுகாப்பாக எனது வீட்டிற்கு செல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.