கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் சென்டர் மீடியனில் மோதி விபத்து.! திமுக எம்.பி-யின் மகன் சம்பவ இடத்திலேயே பலி

விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோவின் மகன் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார்.

சென்னையைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி இளங்கோவின் மகன் ராகேஷ், தனது நண்பர் வேதவிகாஷூடன் மகேந்திரா தார் காரில் புதுச்சேரிநோக்கி சென்றுக் கொண்டிருந்துள்ளார்.

காரை ஓட்டிச் சென்ற ராகேஷ் கீழ்புத்துப்பட்டு அருகே சென்ற போது, சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்ததால், அதன் மீது மோதாமல் இருக்க காரை ஓரமாக திருப்ப முற்பட்ட போது கார் கட்டுப்பாட்டை இழந்து செண்டர் மீடியனில் மோதி புரண்டு விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், சம்பவ இடத்திலேயெ ராகேஷ் உயிரிழந்தார். அவரது நண்பர் வேதவிகாஷ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.