முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறையினர் மாநாடு இன்று தொடக்கம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை, வனத் துறை அலுவலர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது.

மாநிலம் முழுவதும் அரசின் திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்துவது குறித்தும், மாநிலத்தில்சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காகவும், ஆண்டுதோறும் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கான மாநாடு நடத்தப்படும். கடந்த சில ஆண்டுகளாக இந்த மாநாடு நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு மாநாட்டை நடத்த தமிழக அரசு முடிவெடுத்தது.

அதன்படி இன்று முதல், வரும் 12-ம் தேதி வரை, சென்னை தலைமைச் செயலகத்தில் மாநாடு நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தஆண்டு முதல்முறையாக வனத்துறை அலுவலர்களும் பங்கேற்கின் றனர்.

இன்று காலை 10 மணி முதல்1 மணி வரை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் இணைந்த மாநாடு நடைபெறும். மாலை 4 மணி முதல் 6.30 மணிவரை காவல்துறை அதிகாரிகள் மாநாடும், இறுதியில் விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

நாளை (மார்ச் 11) காலை 10 முதல் 1 மணி வரையும், மாலை 4 முதல் 6.30 மணி வரையும், அதன்பின் நாளை மறுநாள் காலை 10 முதல் 1 மணி வரையும் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெறும். தொடர்ந்து மாலை 4 முதல் 6 மணிவரை மாவட்ட ஆட்சியர்கள், வனத் துறை அதிகாரிகள் மாநாடும், 6 மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

அரசின் அறிவிப்புகள், திட்டங்கள்

கடந்த 10 மாதங்களாக தமிழகஅரசு பல்வேறு புதிய அறிவிப்புகளையும், திட்டங்களையும் வெளியிட்டு செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில் ஆளுநர் உரை, முதல்வரின் அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை, அமைச்சர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் எனமொத்தம் 1,704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு 80 சதவீதத்துக்கும் மேலானவற்றுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டங்கள் தோறும் இந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், அடுத்தக் கட்ட செயல்பாடுகள் குறித்தும் மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.

இம்மாநாட்டில் முதல்முறையாக வனத்துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ள நிலையில், வனத்துறை தொடர்பான திட்டங்களையும் முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.