சினி கடலை| Dinamalar

* தெலுங்கில் கால் வைத்த நடிகைநடிகை சஞ்சனா ஆனந்த், தற்போது தெலுங்கு திரையுலகில் நுழைந்துள்ளார். இதன் மூலம் சாண்டல்வுட்டின் மற்றொரு நடிகை, தெலுங்கில் கால் வைத்துள்ளார். இதில் அவர், தேஜு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காதல் கதை, நடிப்புக்கு வாய்ப்புள்ள வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது, இவரது விருப்பம். கன்னடம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு மொழிகளில் இருந்தும், சஞ்சனாவுக்கு வாய்ப்புகள் வருகிறது. ஏப்ரலில் ஒரு கன்னட படம் ஒப்பந்தமாகும் வாய்ப்புள்ளது. கன்னடத்தில் இவர் நடித்த சலகா திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.*ஏழு மொழிகளில் திரையிட திட்டம் தமிழ், தெலுங்கில் பிசியாக நடிக்கும் ஸ்ரேயா, கன்னடத்துக்கு வந்துள்ளார். கப்ஜா என்ற படத்தில், இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். சாண்டல்வுட்டில் இது அவருக்கு முதல் படமாகும். இதற்கு முன் பல இயக்குனர்கள், ஸ்ரேயாவை கன்னடத்துக்கு அழைத்து வர முயற்சித்தனர். முடியாமல் போனது. இப்போது உபேந்திராவின் கப்ஜாவில், மதுமதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. பிரமாண்டமாக தயாராவதால் தாமதமாகிறது. இப்படத்தை ஏழு மொழிகளில் திரையிட, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.*மெக்கானிகல் இன்ஜினியரிங் மாணவிவாஸ்து பிரகாரா படத்தில், இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் ஐஷானி ஷெட்டி. இவர் கன்னடத்தில் திறமையான நடிகையரில் ஒருவர். தற்போது ஹொந்திசி பரயிரி என்ற படத்தில், சனிஹா என்ற பெயரில் மெக்கானிகல் இன்ஜினியரிங் மாணவியாக நடிக்கிறார். இது தவிர தரணி மண்டல மத்யதொலகே என்ற படத்தில், இதுவரை அவர் ஏற்காத கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். இதற்கு இவரே பொருத்தமானவர் என்பதால், இயக்குனர் வற்புறுத்தி ஐஷானியை நடிக்க வைத்துள்ளாராம். இது கிரைம், திரில்லர் கதை.* அதிகமாகும் உடல் எடைஹேமந்த் ராவ் இயக்கும், சப்த சாகரதாசே எல்லோ இரண்டாவது பகுதியில், ரக்ஷித் ஷெட்டி நாயகனாக நடிக்கிறார். படத்தின் முதல் பாகத்துக்காக அவர் எடையை குறைத்துக்கொண்டார். தற்போது இரண்டாம் பாகத்துக்காக, 20 கிலோ எடையை அதிகப்படுத்துகிறார். 10 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் கதை என்பதால், கெட் – அப்பை மாற்ற வேண்டியுள்ளது. உடற்கட்டையும் திடப்படுத்த வேண்டுமென்பதால், தகுதியான பயிற்சியாளரை தேடுகிறார். ஏப்ரல் இரண்டாம் வாரம் படப்பிடிப்பு துவங்க வாய்ப்புள்ளது.*ஆங்கில படத்துக்கு ‘டப்பிங்’சாண்டல்வுட்டில் ரங்கி தரங்கா போன்ற சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அனுப் பண்டாரி இயக்கும் திரைப்படமே விக்ரம் ரோனா. சுதிப் நாயகனாக நடிக்கும் இப்படம், ஆங்கில மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ஆங்கில படத்திற்கு, சுதீப்பே டப்பிங் பேசியுள்ளார். ஆங்கில படத்துக்கு டப்பிங் பேசிய கன்னடத்தின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெருமை, இவருக்கு கிடைத்துள்ளது. ஹாலிவுட்டிலும் அடையாளம் காணப்பட்டதால், இவரது ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர். இப்படம் கன்னடம், ஆங்கிலம் உட்பட, 14 மொழிகளில் திரைக்கு வருகிறது.*கிரைம், திரில்லர் கதையம்சம்காட்டன்பேட் கேட் படப்பிடிப்பு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் முதல் வாரம் திரைக்கு வர, தயார் நிலையில் உள்ளது. கிரைம், திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு, பெங்களூரு, ஹைதராபாத்தின் சுற்றுப்பகுதிகளில் நடந்துள்ளது. கன்னடம், தெலுங்கில், ஒரே நேரத்தில் திரைக்கு வருகிறது. தெலுங்கில் இதற்கு சீதன்னபேட் கேட் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் நான்கு பாடல்கள் உள்ளது.*நாயகனை சுற்றி கதை முற்றிலும் ஆக்ஷன் கதையம்சம் கொண்ட கன்ட்ரிமேட் என்ற படத்துக்கு சமீபத்தில் பூஜை போடப்பட்டது. நிஷ்சித் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ரேச்சல் டேவிட் நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கன்னடத்தில் வளர்ந்து வரும் நடிகை இவர். பெங்காலி பெண்ணாக நடிக்கிறார். சில கசப்பான சம்பவங்களை பொறுக்க முடியாமல், சொந்த ஊரை விட்டு, கோல்கத்தாவுக்கு செல்லும் நாயகனை சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு பிடித்தமான அனைத்தும் இதில் உள்ளதாம்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.