புறநகர் ரயில்களில் விருப்பம் போல் பயணம் செய்யும் முறை! மீண்டும் நடைமுறைப்படுத்தியது தெற்கு ரயில்வே.!

சென்னை புறநகர் ரயில்களில் விருப்பம் போல் பயணம் செய்யும் சுற்றுலா சேவை பயணச்சீட்டு வழங்கும் முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில் பயணங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா தொற்று பரவல் பெருமளவு குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை புறநகர் ரயில்களில் விருப்பம் போல் பயணம் செய்யும் சுற்றுலா சேவை பயணச்சீட்டு முறையும் மீண்டும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடம், சென்னை கடற்கரை முதல் திருவள்ளூர் வரையிலான வழித்தடம், சென்னை கடற்கரை, கும்மிடிப்பூண்டி வழித்தடம், டென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் விருப்பம் போல் பயணிக்க முடியும். 

இதற்காக ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் பயணம் செய்யும் வகையிலான பயணச்சீட்டுகளை பெறலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பயணக்கட்டணத்தை பொருத்தவரை நாள்களின் அடிப்படையில் பெரியவர்களுக்கு 70 ரூபாய் 575 ரூபாய் வரையும், சிறியவர்களுக்கு 45 ரூபாய் முதல் 330 ரூபாய் வரையிலும் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.