பெண்களே திருமணத்தில் கவனமுடன் இருங்கள்… பிரபல சீரியல் நடிகை பகீர் பேட்டி

Serial Actress Shalini Life Incident Update : சின்னத்திரையின பிரபல நடிகை ஷாலினி கணவரால் தனக்கு ஏற்பட்ட துன்பங்கள் மற்றும் அவரால் அனுபவித்த டார்ச்சர் குறித்து வெளிப்படியாக பேசியுள்ள இன்டர்வியூ தொடர்பான வீடியோ பதிவு யூடியூப் தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின், ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் வி கேர்ள்ஸ் மற்றும் காமெடி நிகழ்ச்சியில் பலவற்றில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷாலினி. மேலும் சன்டிவி மற்றும் ஜெயா டிவியில், ஒளிபரப்பான சீரியல்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் விஜய் டிவி ரியாலிட்டி ஷோ ஒன்றில் தனது அம்மாவுடன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி அர்ச்சனாவும் அவரது மகள் சாராவும் தொகுத்து வழங்கினர்.

இந்நிலையில, சமீபத்தில் நடிகை ஷாலினி யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தனது கணவரால் தான் அனுபவித்த டார்ச்சர், குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். ஷாலினிக்கு முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு நடன நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற ஷாலினிக்கும் ரியாஸ் என்ற நபருக்கும் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதில் ரியாஸ்க்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது. ஆனால் அவர் தற்போது தன்னுடன் இல்லை பிரிந்து செனறுவிட்டதாக முகமது கூறியுள்ளார்.  

இந்நிலையில், திருமணத்திற்கு பின் துபாயில் கணவருடன் வசித்து வந்த ஷாலினி, அவ்வப்போது சென்னைக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். தற்போ ஷாலினிக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், திருமண வாழ்க்கையில் கணவரால் தான் சந்தித்த டார்ச்சர் குறித்து பேசியுள்ள ஷாலினி, சைக்கோ போல் நடந்துகொள்வது, குடித்துவிட்டு அடிப்பது, ரத்தம் வந்தாலும் மீண்டும் அடிப்பது என பல இன்னல்களை சந்தித்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் குடிக்கு அடிமையானது, தவறாக வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவது, உள்ளிட்ட மோசமான செயல்களில் ஈடுபட்டதாகவும், இந்த பிரச்சினை தொடர்பாக நீதிமன்றம் வரை சென்றதாகவும், கூறியுள்ளா அவர், தனது கணவருக்கு ஏற்கனவே இரண்டுமுறை திருமணம் நடந்துள்ளதாகவும், எல்லாவற்றையும் மறைத்து தன்னையும் தன்னைப்போற்று மேலும் சில பெண்களையும் ஏமாற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அப்பா இல்லாத பெண்களைதான் குறிவைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த டார்ச்சர் தாங்க முடியாததால், தற்போது அவரை விட்டு பிரிந்து இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் தன்தை நிம்மதியாக வாழவிடாமல் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகவும், அடிக்கடி வந்து சண்டை போட்டு குழந்தையின் அமைதியையும் கெடுக்கிறார் என்றும் என்னைப்போல் இனி எந்த பெண்களும் ஏமாற வேண்டாம் இரண்டாவது திருமணம் செய்யும்போது கவனமுடன் இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷாலினியின் இந்த பேட்டி யூடியூப் தளத்தில் வைரலாகி வரும் நிலையில், மீடியாவில் அவரின நெருங்கிய நண்பர்கள் பலருக்கும் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.