விஜய் பெயரை சூர்யா தவிர்த்தது சரியா? வீடியோ சர்ச்சை!

சூர்யா, தென்னிந்திய சினிமா துறையில் வெர்சட்டைல் நடிகர்களில் ஒருவர், அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது.

மேலும், சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய இரண்டு படங்களும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. அந்தவகையில்,  இரண்டு வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தையே அதிரவைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தான், இந்த படம் மறைமுகமாக பேசியுள்ளது என விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக சூர்யா சமீபத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படக்குழுவினருடன் கேரளா சென்றிருந்தார்.

அப்போது’ சூர்யா பேசுகையில்’ நேருக்கு நேர் படத்தின் போது ரசிகர்கள்’ மற்றொரு நடிகருக்கு கொடுத்த ஆதரவு எனக்கு கிடைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். தற்போது அது கிடைப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.

சூர்யா இப்படி பேசும் வீடியோ தான்’ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

1997 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளிவந்த ‘நேருக்கு நேர்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சூர்யா, அந்த படத்தில் சூர்யாவுடன், விஜய் இணைந்து நடித்து இருந்தார். விஜய் உடைய பெயரைத் தான் சூர்யா மறைமுகமாக சொல்லியிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும், விஜய்யும், சூர்யாவும்’ 2001 ஆம் ஆண்டு வெளிவந்த பிரண்ட்ஸ் படத்திலும் இணைந்து நடித்தனர். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

தற்போது சூர்யா’ இயக்குநர்கள் பாலா மற்றும் வெற்றி மாறன் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கிறார். மேலும், ‘பீஷ்ம பர்வம்’ இயக்குனர் அமல் நீரத்துடன் ஒரு படத்தையும் சூர்யா உறுதிப்படுத்தியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.