300 மீட்டர் பள்ளத்தில் பேருந்து உருண்டு விழுந்து விபத்து… 2 குழந்தை உள்பட 15 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் 300 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விழுந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.

சன்குவசபா மாவட்டத்தில் இருந்து கிளம்பிய பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 300 மீட்டர் பள்ளத்தில் பேருந்து உருண்டு விழுந்ததில் 2 குழந்தைகள், உள்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேகமாக பேருந்து சென்றதே விபத்துக்கான காரணம் என போலீசார் தெரிவித்தனர். படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.