Hate against Russians: தடம் புரளும் பேஸ்புக்.. புடினுக்கு எதிராக வன்முறையைத் தூண்ட ஆதரவு!

ரஷ்யப் படையினருக்கு எதிராகவும், ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராகவும் வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளைப் போட சில நாடுகளில் மட்டும் அனுமதிக்கப் போவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தி தெரிவிக்கிறது.

யாருக்கு எதிராகவும், எந்த வகையிலும் வன்முறை, ஆபாசம் ஆகியவற்றைத் தூண்டும் வகையிலான பதிவுகளை அனுமதிப்பதில்லை என்ற தனது நிலையிலிருந்து பேஸ்புக் நிறுவனம் தடம் புரள்வதாக இது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் துவேஷப் பேச்சுக் கொள்கையின் முக்கிய அம்சமே, தனி நபர்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட யாருக்கு எதிராகவும் துவேஷமாக பேசுவது, எழுவது, வீடியோ போடுவது, விமர்சிப்பது, தூண்டி விடுவது கூடாது என்பதுதான். யாராவது இப்படிப் போட்டால் உடனே அதை பிளாக் செய்து விடும் பேஸ்புக். ஆனால் இப்போது பேஸ்புக்கே வன்முறையைத் தூண்டும் பதிவுகளை ஆதரிக்க முடிவு செய்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் ரஷ்யர்கள், ரஷ்ய ராணுவம், ரஷ்ய அதிபர் புடின் ஆகியோருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளை அனுமதிக்க பேஸ்புக்,
இன்ஸ்டாகிராம்
ஆகியவை முடிவு செய்துள்ளதாக அதன் தாய் நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக மாறியுள்ளது பேஸ்புக்.

“முதல்வரே.. அரே.. அரே”.. மண்ணைக் கவ்விய 2 இந்நாள்.. 5 முன்னாள் முதலமைச்சர்கள்!

ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாசென்கோ ஆகியோரைக் கொலை செய்யத் தூண்டும் வகையிலான பதிவுகளையும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அனுமதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தங்களது கொள்கைக்கு விரோதமானதுதான் என்றாலும் கூட உக்ரைன் ஊடுறுவலுக்கு எதிரான தங்களது சிறிய பங்களிப்பாக இதை மெட்டா வர்ணித்துள்ளது. அதேசமயம், ரஷ்ய மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளை தாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் மெட்டா கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.

இதற்கிடையே, மெட்டா நிறுவனத்தின் செயல்பாடுகள், தீவிரவாத செயல் என்று ரஷ்யா வர்ணித்துள்ளது. உடனடியாக தீவிரவாத மெட்டா நிறுவனம் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருவருக்கு எதிராக மற்றவர்களை வன்முறையில் ஈடுபடுமாறு செய்ய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உரிமையாளர்களுக்கு பயனாளர்கள் எந்த அனுமதியும், உரிமையும் கொடுக்கவில்லை. இதுபோன்ற செயல்கள் தீவிரவாதத்திற்குச் சமமானது. அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூதரகம் கூறியுள்ளது.

“Thank you Tamil Nadu”.. டி.எம்.கிருஷ்ணா போட்ட ஒத்த டிவீட்.. மொத்த டிவிட்டரும் பத்திக்கிச்சே!

பேஸ்புக்கின் இந்த துவேஷப் பேச்சுக் கொள்கை தளர்வானது, ஆர்மீனியா, அஜர்பைஜான், எஸ்டோனியா, ஜார்ஜியா, ஹங்கேரி, லாத்வியா, லிதுவேனியா, போலந்து, ருமேனியா, ரஷ்யா, ஸ்லோவேகியா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு மட்டும் பொருந்துமாம். அதாவது முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் பால்டிக் நாடுகளை ரஷ்யாவுக்கு எதிராக திருப்பி விடும் வேலையை பேஸ்புக்கும், இன்ஸ்டாகிராமும் செய்வதாக கருதப்படுகிறது.

மெட்டா நிறுவனத்தின் இந்த பாரபட்சமான செயல்பாடுகள், அந்த நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மையை வெகுவாக சீர்குலைக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது. மேலும் குறிப்பிட்ட நாட்டுக்கு எதிராக ஒரு தனியார் சமூக வலைதளம் இப்படி பகிரங்கமாக இறங்குவது அபாயகரமானது என்றும் கருத்து எழுந்துள்ளது. பேஸ்புக்கின் இந்த பாரபட்ச போக்கை கண்டித்து பலரும் பேஸ்புக்கிலேயே கருத்துக்களைப் பதிவிட ஆரம்பித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.