இந்தியா தான் கைகொடுக்கணும்.. எண்ணெய், கேஸ்-ல் முதலீட்டை அதிகபடுத்துங்கள்.. ரஷ்யா வேண்டுகோள்!

ரஷ்யா – உக்ரைனுக்கு இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் பல்வேறு நாடுகளும், ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக ரஷ்யாவின் பொருளாதாரத்தினை வீழ்ச்சியடைய வைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான நாடான ரஷ்யா தற்போது, பல்வேறு நாடுகளின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டுள்ளது.

3 மாத சம்பளத்துடன் சண்டை போட ரெடியா? டெஸ்லா ஊழியர்களுக்கு எலன் மாஸ்க் சூப்பர் அறிவிப்பு!!!

இந்த நிலையில் ரஷ்ய நிறுவனங்கள் பெரும் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன. தங்களது வணிக வளர்ச்சியானது பெரும் சரிவினைக் கண்டுள்ளது.

மோசமான வளர்ச்சி

மோசமான வளர்ச்சி

இதற்கிடையில் தான் ரஷ்ய நிறுவனங்கள் தங்களது வணிக வளர்ச்சியினை மேம்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றன. 1991ம் ஆண்டிற்கு பிறகு சோவியத் யூனியனின் வளர்ச்சியானது, மிக மோசமான வளர்ச்சியினை எதிர்கொண்டுள்ளது. இதனை மீட்டெடுக்கும் விதமாக ரஷ்யா நடவடிக்கையினை எடுக்க ஆரம்பித்துள்ளது.

ரஷ்யாவுக்கு எதிராக வாக்களியுங்கள்

ரஷ்யாவுக்கு எதிராக வாக்களியுங்கள்

ஐக்கிய நாடுகள் சபையில் நீண்டகாலமாக ஆயுத சப்ளை செய்யும் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. உக்ரைன் – ரஷ்ய நடவடிக்கையில் இருந்து ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்க இந்தியாவினை மேற்கத்திய நட்பு நாடுகள் இந்தியாவை ஊக்குவித்துள்ளன.

ரஷ்யா - இந்தியாவின் வணிக உறவு
 

ரஷ்யா – இந்தியாவின் வணிக உறவு

ஆனால் இந்தியாவுக்கான ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி 1 பில்லியன் டாலர்களை தொட்டுள்ளது. தற்போது நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில், இந்த எண்ணிக்கையை அதிகரிக்க தெளிவான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் விரிவாக்கம்

இந்தியாவில் விரிவாக்கம்

ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இந்திய முதலீட்டை மேலும் ஈர்ப்பதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். ரஷ்யா நிறுவனங்களின் விற்பனை நெட்வொர்க்குகளை இந்தியாவில் விரிவுபடுத்துகிறோம் ரஷ்யாவின் துணைப் பிரதமர் அலெக்ஸாண்டர் நோவாக், இந்திய பெட்ரோலியம் மற்றூம் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் கூறியுள்ளார்.

ஏற்றுமதியை சீர்குலைக்கும்

ஏற்றுமதியை சீர்குலைக்கும்

அமெரிக்கா முன்னதாக நடப்பு வாரத் தொடக்கத்தில் எண்ணெய் இறக்குமதியினை தடை செய்துள்ளது. இதே பிரிட்டன் இந்த ஆண்டின் இறுதிக்குள் தடை செய்யும் என்றும் கூறியுள்ளது. இது உலகளாவிய எரிசக்தி சந்தையை மேலும் சீர்குலைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சர்வதேச அளவில் எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யா முன்னணியில் உள்ளது.

ரஷ்ய நிறுவனங்களில் முதலீடு

ரஷ்ய நிறுவனங்களில் முதலீடு

இந்தியா அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே, ரஷ்ய நிறுவனங்கள் சிலவற்றில் பங்குகளை வைத்துள்ளன. அதே நேரம் ரோஸ் நெப்ட் உள்ளிட்ட ரஷ்ய நிறுவனங்கள் இந்திய சுத்திகரிப்பு நிறுவனமான நயாரா எனர்ஜியில் பெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ளன. சில இந்திய நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயையும் வாங்குகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Russia expects india to deepen investment in its oil & Gas business

Russia expects india to deepen investment in its oil & Gas business/இந்தியா தான் கைகொடுக்கணும்.. எண்ணெய், கேஸ்-ல் முதலீட்டை அதிகபடுத்துங்கள்.. ரஷ்யா வேண்டுகோள்!

Story first published: Saturday, March 12, 2022, 19:07 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.