டெல்லியில் குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து- உடல் கருகி 7 பேர் பலி

வடகிழக்கு டெல்லி கோகுல்புரி பகுதியில்  உள்ள குடிசைப் பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் குடிசை தீப் பற்றி எரிவதை அறிந்து அலரியடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். அதற்குள் தீ வேகமாக பரவி சுமார் 30 குடிசைகள் கொளுந்துவிட்டு எரிந்தது.
சம்பவம் குறித்து அறிந்த போலீசார் 30 தீயணைப்பு வாகனத்துடன் விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் தீவிர முயற்சிக்குப் பிறகு அதிகாலையில் சுமார் 4 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதற்கிடையே நடத்தப்பட்ட மீட்புப் பணியில், தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்த 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

காலையிலேயே சோகமான செய்தியைக் கேட்டேன். நான் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்..
தாமரை சின்னத்துடன் பாஜக வடிவமைத்துள்ள காவி நிற தொப்பி- தொண்டர்கள் உற்சாகம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.