பதவி உயர்வு கூட வேண்டாம்.. ஒர்க் பிரம் ஹோம் கொடுங்க.. அது போதும்..!

கொரோனாவின் வருகைக்கு பிறகு ஊழியர்கள் பணிபுரியும் சூழல் என்பது பெரிதும் மாறியுள்ளது. பல துறைகளிலும் வீட்டில் இருந்து பணிபுரியும் போக்கு அதிகரித்துள்ளது.

எனினும் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், பல துறை சார்ந்த நிறுவனங்களும் மீண்டும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க தொடங்கியுள்ளன.

3 மாத சம்பளத்துடன் சண்டை போட ரெடியா? டெஸ்லா ஊழியர்களுக்கு எலன் மாஸ்க் சூப்பர் அறிவிப்பு!!!

இதற்கிடையில் இது குறித்து இவந்தி சாப்ட்வேர் நிறுவனம் ஆய்வினை நடத்தியுள்ளது. அதில் வெளியான சுவாரஷ்ய பதில்களை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

71% பேர்  WFH ஆப்சன் போதும்

71% பேர் WFH ஆப்சன் போதும்

இதில் வெளியான பதிலளித்தவர்களில், 71% பேர் தங்களுக்கு பதவி உயர்வும் கூட வேண்டாம். ஆனால் வீட்டில் இருந்து பணிபுரியும் ஆப்சன் கொடுக்க வேண்டும் என விரும்புவதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

இதே 42% பேர் ஹைபிரிட் மாடல் பணியினை விரும்புவதாகவும், அதில் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆபிஸ் வருவது தான் ஹேப்பி

ஆபிஸ் வருவது தான் ஹேப்பி

இதே 30% பேர் நிரந்தரமாக வீட்டில் இருந்தே வேலை செய்வதையே விரும்புவதாகவும், 13% பேர் மட்டுமே அலுவலகத்திற்கு முழு நேரம் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதே பெருந்தொற்று காலத்தில் கிரேட் ரெசிக்னேஷன் பற்றி கூறியவர்கள், கட்டுபாடுகள் அதிகம் இருந்த காலகட்டத்தில் ஊழியர்களுக்கு தங்களது பணியினை மாற்ற எளிதாக வாய்ப்புகள் அமைந்து விட்டது. பதிலளித்தவர்களில் 24% பேர் தங்களது பணியினை மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 அட்ரிஷன் விகிதம் அதிகரிக்கலாம்
 

அட்ரிஷன் விகிதம் அதிகரிக்கலாம்

இதற்கிடையில் அடுத்த 6 மாதங்களில் 28% பேர் தங்களது பணியில் இருந்து வெளியேறலாம். அதன் பிறகு 36% பேராக அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு வெளியேறும் ஊழியர்கள் வேண்டுமானாலும் சென்று, யாருக்காக வேண்டுமானாலும் பணிபுரியலாம். ஆக நிறுவனங்கள் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள தங்களது யுக்திகளை மாற்ற வேண்டும்.

பெரிய கவலைகள்

பெரிய கவலைகள்

எனினும் இந்த ஆய்வில் 10% பேர் வீட்டில் இருந்து பணிபுரிவது நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், அவர்களின் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தினை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். அதோடு சக ஊழியர்களுடனான தனிப்பட்ட சுதந்திரத்தினை இழப்பதாகவும், வீட்டில் இருந்து பணிபுரியும்போது அதிக நேரம் பணி புரிவதாகவும் இது அவர்களின் பெரும் கவலைகளில் ஒன்றாகவும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Ivanti report say 71% people like rather work at home than get a promotion

Ivanti report say 71% people like rather work at home than get a promotion/பதவி உயர்வு கூட வேண்டாம்.. ஒர்க் பிரம் ஹோம் கொடுங்க.. அது போதும்..!

Story first published: Saturday, March 12, 2022, 19:48 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.