மடுகரை பள்ளியில் மகளிர் தின விழா| Dinamalar

நெட்டப்பாக்கம் : மடுகரை அரசு தொடக்கப் பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தலைமை ஆசிரியர் சீனிவாசன் வரவேற்றார். மகளிர் தினத்தையொட்டி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

விழாவில் துணை சபாநாயகர் ராஜவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். ஆசிரியைகளுக்கும் சிறப்பு பரிசுகளை வழங்கினார். முன்னதாக ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். ஆசிரியை கவுரி நன்றி கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.