ராகுல் காந்தி பதவி விலக வேண்டுமா? பீட்டர் அல்போன்ஸ் அதிரடி ட்வீட்

நடந்து முடிந்த 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரக்காண்ட், மணிப்பூர், ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சியை ஆம் ஆத்மி கட்சியிடம் பறிகொடுத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பாஜக 2014ம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சி செய்துவருகிறது. அதனால், வருகிற 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியையும் கவலையையும் அளித்துள்ளது. தற்போது, இந்தியாவில் காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான், சந்தீஸ்கர் இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது.

தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைத்து காங்கிரஸ் தொண்டர்களின் கடின உழைப்பு மற்றும் அவர்களுடைய அர்ப்பணிப்புக்கு எனது நன்றி. இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், 5 மாநிலத் தேர்தல் முடிடுவுகளையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர்களும், சிவகங்கை மக்களவைத் தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம், நெட்பிளிக்ஸில் நல்ல நிகழ்ச்சி பார்ப்பதற்கு பரிந்துரை செய்யுங்கள் என்று நையாண்டியாக பதிவிட்டு நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்றார்.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவரும் தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவரான பீட்டர் அல்போன்ஸ், 5 மாநில தேர்தல் முடிவுகளில் காங்கிரச் தோல்வியடைந்துள்ளது குறித்து, முன்னாள் பிரதமர் நேருவின் புகழ்பெற்ற வாசகத்தை பதிவிட்டுள்ளார். இது பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலக வேண்டுமா என்று நெட்டிசன்கள் மற்றும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த கேள்விகள் எழுப்பி வருகின்றனர். பீட்டர் அல்போன்ஸின் இத்தகையப் பதிவால் காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பீட்டர் அல்போன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “சரியான மாற்று (alternative)என்ன என்பதினை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வரை மாற்றம் வராது என்று உணருங்கள்!
நானா?எனது கட்சியா? என்றால் எனது கட்சி!
எனது கட்சியா? நாடா? என்றால் எனது நாடு!
நாட்டை காப்பாற்ற கட்சி தியாகம் செய்யவேண்டிய நேரமிது! காலம் வழங்கியிருக்கும் கடைசி வாய்ப்பு!2024!” என்று பதிவிட்டுள்ளார்.

இதைக் குறிப்பிட்டு நெட்டிசன்கள், பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பதவி விலக வேண்டும் என்று கூறுகிறார என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏற்கனவே, சில கூட்டங்களில் பிரதமராகும் தகுதி ஸ்டாலினுக்கு உள்ளது என பீட்டர் அல்போன்ஸ் பேசி இருக்கிறார். இதனால், அவருடைய ட்வீட்டை வைத்து, பீட்டர் அல்போன்ஸ் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துகிறாரா என்றும் சிலர் கேட்டு வருகின்றனர்.

அதே போல, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமெரிக்கை நாராயணன், “ராகுல் காந்தியை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. ஆனால், பொதுமக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது நாம் ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மை” என்று வெளிப்படையாகக் கூறினார்.

இந்த நிலையில்தான், பீட்டர் அல்போன்ஸ், “சரியான மாற்று (alternative)என்ன என்பதினை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வரை மாற்றம் வராது என்று உணருங்கள்! நானா?எனது கட்சியா? என்றால் எனது கட்சி! எனது கட்சியா? நாடா? என்றால் எனது நாடு! நாட்டை காப்பாற்ற கட்சி தியாகம் செய்யவேண்டிய நேரமிது! காலம் வழங்கியிருக்கும் கடைசி வாய்ப்பு! 2024!” என்று தெரிவித்திருப்பது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேங்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, “காங்கிரஸ் விரும்பினால் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் இணையலாம். 4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2024ல் எதிரொலிக்கும் என்பது சாத்தியமில்லை” என்று காங்கிரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.