உக்ரைனில் ரஷ்ய படைகளால் அமெரிக்கா பத்திரிக்கையாளர் சுட்டுக் கொலை!



உக்ரைனில் ரஷ்ய படைகளால் அமெரிக்க பத்திரிக்கையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது தொடர்ந்து 18வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.

இந்நிலையில், கீவ் புறநகரில் உள்ள இர்பின் நகரில் Brent Renaud என்ற அமெரிக்க பத்திரிக்கையாளர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கீவ் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Brent Renaud, ரஷ்ய வீரர்களால் குறிவைக்கப்பட்டதாகவும், மேலும் இரண்டு ஊடகவியலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கீவ் காவல்துறைத் தலைவர் Andriy Nebytov தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் நடக்கும் போர் குறித்து செய்தி சேகரிக்க வந்த வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல் முறை.

Brent Renaud-க்கு அணிந்திருந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளர் அடையாள அட்டையின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், Renaud இறந்த செய்தியைக் கேட்டு வருத்தமடைந்துள்ளதாகவும், ஆனால் அவர் உக்ரைனில் தங்கள் நிறுவனத்திற்காக வேலை செய்யவில்லை என்று கூறியுள்ளது.

அவர் கடைசியாக 2015ல் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்தார் என கூறியுள்ள நியூயார்க் டைம்ஸ், , உக்ரைனில் அவர் அணிந்திருந்த அடையாள அட்டை பல ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளது.

உக்ரைனில் Renaud யாருக்காக வேலை செய்கிறார் என்பது குறித்த தகவல் உடனடியாகத் தெரியவில்லை. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.