கலர்ஸ் தமிழ் சீரியலில் இணைந்த விஜய் டிவி நடிகை: வைரல் ப்ரோமோ

Rachitha Mahalakshmi joins Colors tamil TV serial: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் புதிய சீரியலில் ரச்சிதா மஹாலக்ஷ்மி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கி, நன்றாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் இது சொல்ல மறந்த கதை. இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. சீரியல் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இந்த சீரியலில் ரச்சிதா மஹாலக்‌ஷ்மி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ரச்சிதா பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளினியாகவும், தற்போது பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். ரச்சிதா விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர். பின்னர் ஜீ தமிழில் இவர் நடித்த நாச்சியார்புரம் சீரியல் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலிலும் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: விஜய்க்கு அடுத்த பட ஜோடி ரெடி? அட, இவங்க தனுஷ் கூட நடிச்சவங்க ஆச்சே..!

தற்போது ரச்சிதா மஹாலக்‌ஷ்மி இது சொல்ல மறந்த கதை சீரியலில் வக்கீலாக நடிக்கிறார். இதற்கான ப்ரமோவை சீரியல் குழு வெளியிட்டுள்ளது. அதில் உண்மை நம்ம பக்கம் இருக்கு சாதனா கவலைப்படாதீங்க என பதிவிடப்பட்டுள்ளது. அந்த ப்ரமோவில் மகாலட்சுமியை பார்த்து மெர்சல் ஆகிறார் ரச்சிதா. மகாலட்சுமி சவுந்தர்யா என்ற கதாப்பாத்தில் நடிக்கிறார். இனிமேல் ரச்சிதாவுக்கு அவர்தான் எதிரியாக இருப்பார் என தெரிகிறது. கதிர் உண்மை நம்ம பக்கம் இருக்கு நாம் தான் ஜெயிப்போம் என்கிறார். அப்போது மகாலட்சுமியிடம் சாதனா ஒரு கிரிமினல் லாயர் என ரச்சிதாவை அறிமுகம் செய்கிறார் கதிர். இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் இனி சீரியல் விறுவிறுப்பாக இருக்கும் என தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.