“காங்கிரஸூடன் இடதுசாரிகள் இணைந்து பணியாற்றவேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தக்கது!" – கே.எஸ்.அழகிரி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பஸ் நிலையம் அருகே புதியதாக கட்டப்பட்ட பாரதி கிளினிக் மற்றும் கொள்ளிடம் மெடிக்கல்ஸ் ஆகிய இரு கட்டடங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் கிளினிக் மற்றும் கொள்ளிடம் மெடிக்கல்ஸ் ஆகிய  இரண்டையும் திறந்து துவக்கி வைத்துப் பேசினார்.

கே.எஸ்.அழகிரி

அப்போது, “ஜனநாயகத்தின் வெற்றியோ தோல்வியோ ஒரு நாட்டினுடைய அல்லது ஒரு இயக்கத்தினுடைய போக்கை மாற்றி விட முடியாது. 100 ஆண்டுகள் பாரம்பர்யம் மிக்க காங்கிரஸ் கட்சியானது பலமுறை பின்னடைவை சந்தித்துள்ளது. ஏராளமான முறை வெற்றி பெற்றிருக்கிறது. இந்த பின்னடைவின் மூலமாக மேலும் எங்களை நாங்கள் எப்படி வழி நடத்திச் செல்ல வேண்டும் என்பதை அறிந்து கொண்டுள்ளோம். இதில் ஏதும் சிரமம் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து நின்று செயலாற்ற வேண்டும் என்று திருமாவளவன்  கூறியிருக்கிறார்

அது வரவேற்க வேண்டிய கருத்து. ஏற்கெனவே மதச்சார்பற்ற கூட்டணி என்பது இந்தியாவில் இருக்கின்ற எல்லா இடதுசாரிகளையும், முற்போக்காளர்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒன்று திரட்டிதான் செயல்பட்டு வருகிறது. எனவே அந்த கருத்து ஏற்புடையதே” என்றார்.

கே.எஸ்.அழகிரி

அதைத் தொடர்ந்து, சென்னையில் பட்டியலினத்தவர் இடத்தை கிறிஸ்தவர்கள் ஆக்கிரமித்திருப்பதாக அர்ஜுன் சம்பத் கூறியது பற்றி கே.எஸ்.அழகிரி பேசுகையில், “அது அவர்களுடைய ரத்தத்திலேயே ஊறியுள்ளது. எல்லோரையும் சோதனை செய்து பார்ப்பது தவறான அணுகுமுறை. அவர்களுக்கு அரசின் சான்றிதழ் பட்டியலினத்தவர் என்று உள்ளது. அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது. அதை ஏற்காமல் அவர்கள் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்கள் என சோதித்துப் பார்ப்பது தவறான அணுகுமுறை “என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.