தெறி படத்தின் விஜய் போல!! மனம் திறக்கும் சீரியல் நடிகர்

சின்னத்திரை நடிகர் விஷ்ணு விஜய் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் 'இது சொல்ல மறந்த கதை' என்ற தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதேசமயம் ஜீ தமிழின் சத்யா-2 தொடரிலும் விஷ்ணு விஜய் ஹீரோவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விஷ்ணு விஜய் சமீபத்தில் கூறிய போது, 'தொலைக்காட்சியில் வெவ்வேறு வேடங்களில் நடிப்பது பெருமையாக இருக்கிறது' என கூறியுள்ளார்.

மேலும், 'இது சொல்ல மறந்த கதையில், என்னுடைய கதாபாத்திரம் அர்ஜூன். இந்த தொடரில் முக்கியமானதே எனக்கும் மகளுக்குமான உறவு தான். அர்ஜூன் – அக்ஷரா உறவு என்பது தெறி படத்தை நினைவூட்டுவது போல இருக்கும். தெறி படத்தில் விஜய் மற்றும் நைனிகா பேபி போல இதில் அர்ஜூனும் அக்ஷராவும் பேசப்படுவார்கள்' என கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.