மற்றொரு உக்ரைன் மேயரை கடத்திச் சென்ற ரஷ்யா!உக்ரைனின் தெற்கு நகரமான Dniprorudne நகரின் மேயரை ரஷ்யப் படைகள் கடத்திச் சென்றதாக வெளியுறவுத்துறை அமைச்சர் Dmytro Kuleba தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா அந்நாட்டின் தலைநகர் கீவ் நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.

மெலிடோபோல் என்ற நகரைக் கைப்பற்றிய ரஷ்யா, நேற்று அந்நகரின் மேயர் இவா ஃபெடரோவை கடத்திச் சென்றது.

இந்நிலையில் இன்று Dniprorudne நகரின் மேயர் Yevhen Matveyev-வை ரஷ்ய படைகள் கடத்திச் சென்றுள்ளனர்.

Yevhen Matveyev கடத்தப்பட்டதை உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் Dmytro Kuleba உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் Dmytro Kuleba ட்விட்டரில் பதிவிட்டதாகவது, இன்று, ரஷ்ய போர்க்குற்றவாளிகள், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு உக்ரேனிய மேயரான Yevhen Matveyev என்பவரை கடத்திச் சென்றனர்.

முற்றிலும் உள்ளூர் மக்களின் ஆதரவு இல்லாததால், படையெடுப்பாளர்கள் பயங்கரவாதிகளாக மாறுகிறார்கள்.

உக்ரைன் மற்றும் அதன் ஜனநாயகத்திற்கு எதிரான ரஷ்ய பயங்கரவாதத்தை நிறுத்துமாறு அனைத்து நாடுகளுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன் என Dmytro Kuleba தெரிவித்துள்ளார்.  Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.