இறுகும் உக்ரைன் போர்… விளாடிமிர் புடின் எங்கே? எழுந்த புதிய சர்ச்சை


உக்ரைன் மீதான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமறைவாகிவிட்டாரா என்ற கேள்வி பரபரப்பை கிளப்பியுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இளம் வீரர்களை மட்டும் ரஷ்யா உக்ரைனுக்கு அனுப்பி வருகிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், இன்னும் இந்த போர் நீடிக்கும் என்றால் மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் என்றே அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எங்கே என்ற கேள்வி திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, தலைநகர் கீவ்வில் ஜனாதிபதி மாளிகையிலேயே, பாதுகாப்பான பகுதி ஒன்றில் தமது அலுவல்களை மேற்கொண்டு வருகிறார்.

ஆனால் ரஷ்ய ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லமான கிரெம்ளின் மாளிகையில் புடின் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அவருக்கு சொந்தமான 8 சொகுசு இல்லங்களில் அவர் தங்கியிருப்பார் என்றே கூறப்படுகிறது.

பொதுவாக மேற்கு மாஸ்கோவில் அமைந்துள்ள கிராண்ட் கிரெம்ளின் அரண்மனையிலேயே விளாடிமிர் புடின் வசிப்பது வழக்கம்.
1911ல் இருந்தே கிராண்ட் கிரெம்ளின் அரண்மனை ரஷ்ய ஜனாதிபதிகளின் உத்தியோகப்பூர்வ இல்லமாக இருந்து வருகிறது.

69 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த கிராண்ட் கிரெம்ளின் அரண்மனை வளாகமானது சிறப்பு இராணுவத்தினரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், ரஷ்ய ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சிகளை முறியடிக்க, புடின் அடிக்கடி தமது இல்லத்தை மாற்றி வருகிறார் என்பதுடன், அவர் எந்த இல்லத்தில் தங்குகிறார் என்பதையும் இரகசியமாக வைக்கப்படுகிரது.

மேலும், அவர் தங்கும் 8 இல்லங்களும் அவருக்கு சொந்தமானது என்றே கூறப்படுகிறது.
Gelendzhik பகுதியில் அமைந்துள்ள Black Sea Palace, Sochi பகுதியில் அமைந்துள்ள Bocharov Ruchey,

St Petersburg பகுதியில் அமைந்துள்ள Konstantin Palace, Novo-Ogaryovo, Akademika Zelinskogo, Kaliningrad பகுதியில் அமைந்துள்ள Yantar ஆகிய இல்லங்களில் ஏதேனும் ஒன்றில் தற்போது விளாடிமிர் புடின் தங்கியிருப்பார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.