குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு; 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Tenkasi Child welfare department recruitment: தென்காசி மாவட்டம், குழந்தைகள் பாதுகாப்பு அலகில், பாதுகாப்பு அலுவலர், உதவியாளர், கணக்காளர் உள்ளிட்ட 8 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் அனைத்தும் தற்காலிக அடிப்படையில் நிரப்ப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.03.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பாதுகாப்பு அலுவலர் (Security Officer)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 வருடம் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ 21,000

சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Probation Officer)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : பி.எல் அல்லது எல்.எல்.பி வழக்கமான முறையில் சட்டம் பயின்றிருக்க வேண்டும். ஒரு வருடம் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ 21,000

ஆற்றுப்படுத்துநர் (Counselor)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருடம் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ 14,000

சமூகப்பணியாளர் (Social Worker)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருடம் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ 14,000

கணக்காளர் (Accountant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : பி.காம் அல்லது எம்.காம் படித்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ 14,000

தகவல் பகுப்பாளர் (Information Analyser)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : பி.ஏ/பிசிஏ/பி.எஸ்சி புள்ளியியல் அல்லது கணக்கு படித்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ 14,000

உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (Assistant and Computer Operator)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி கல்வியில் பட்டய பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ 10,000

இதையும் படியுங்கள்: ஆவடி OCF நிறுவனத்தில் 180 பணியிடங்கள்; 10th, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

புறத் தொடர்பு பணியாளர் (External Liaison Officer)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.  1 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ 8,000

வயதுத் தகுதி : 40 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2022/03/2022030764.pdf  என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் (பொ), அரசினர் குழந்தைகள் இல்லம், கிராம கமிட்டி மேல்நிலைப்பள்ளி அருகில், ரெட்டியார்பட்டி (இருப்பு), நெட்டூர் வழி, ஆலங்குளம் தாலுகா, தென்காசி – 627854

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.03.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2022/03/2022030799.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.