நாக்பூர்: குடும்பத்தில் அடிக்கடி சண்டை; மனைவி, மகளை கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்

மகாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது தலைநகரமான நாக்பூர் ராஜீவ் நகரில் வசித்து வந்தவர் விலாஸ் காவ்டே(51). இவரின் மனைவி ரஞ்சனா. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். இதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். இது தவிர ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். விலாஸ் காவ்டேயிக்கு வேலை இல்லை. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. இதனால் விரக்தி அடைந்த விலாஸ் இரவு மனைவியும், மகளும் உறங்கிய பிறகு தலையணையால் முகத்தை மூடி இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் வீட்டிற்கு வெளியில் சென்று அங்கு இருந்த மரத்தில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொலை

காலையில் விலாஸ் மகன் எழுந்த போதுதான் வீட்டில் தனது தாயாரும், சகோதரியும் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்தார். உடனே அவர்களின் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது சித்தப்பாவிடம் விலாஸ் மகன் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்த போது விலாஸ் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனது தாயாருக்கு அருகில் படுத்திருந்த தனது மகனை கொலை செய்யாமல் விட்டிருந்தார். மகன் எழுந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இருவரது முகத்திலும் தலையணை வைத்துக்கொண்டு கழுத்தை கத்தியால் அறுத்ததாக போலீஸார் தெரிவித்தனர். அடிக்கடி மனைவியுடன் மட்டுமல்லாது பக்கத்து வீட்டுக்காரர்களுடனும் சண்டை போடுவார் என்று விலாஸ் சகோதரர் கன்பத் தெரிவித்தார். சமீப காலமாக விலாஸ் மனரீதியாக பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டதாவும் கன்பத் தெரிவித்தார். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.