புதுச்சேரி அரசு சாலை போக்கவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டம்… பயணிகள் அவதி

புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், கடந்த இரண்டு வருடங்களாக தீபாவளி போனஸ் வழங்காததை கண்டித்து இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்கன், நடத்துநர்கள் என 800-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து ஊழியர்கள் பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
image
இந்நிலையில், இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுச்சேரி நகரம் மற்றும் வெளியூர்களுக்கு செல்லக்கூடிய 150-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், பணிமனையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக போனஸ் வழங்கக் கோரியும், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.